முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டியில் 100 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழு தலைவர் நரசிம்மன் வழங்கினார்

வியாழக்கிழமை, 27 ஏப்ரல் 2017      நீலகிரி
Image Unavailable

ஊட்டியில் 100 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, 30 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை ஆணை ஆகியவற்றை தமிழக சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவர் பி.எம்.நரசிம்மன் வழங்கினார்.

மதிப்பீட்டுக்குழு ஆய்வுக்கூட்டம்

தமிழக சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழுவின் ஆய்வுக்கூட்டம் ஊட்டியிலுள்ள தமிழகம் அரசினர் விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவர் பி.எம்.நரசிம்மன் தலைமை தாங்கி 100 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் 30 பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை ஆகியவற்றை வழங்கி பேசியதாவது-

சிறப்பு பகுதி திட்டத்திற்கு ரூ.75 கோடி

மறைந்த தமிழக முதல்வர் அம்மாவின் அரசு ஏழை_எளிய மற்றும் அனைத்துத்தரப்பு மக்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை தீட்டி அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக ஏழை_எளிய மக்களுக்கு அத்தகைய திட்டங்கள் முறையாக சென்றடைகிறதா என்பதை உறுதி செய்ய எங்களைப் போன்ற குழுக்களை எல்லா பகுதிகளுக்கும் அமைத்துள்ளது. சமூக பொருளாதார மேம்பாட்டினை மாநிலம் முழுவதும் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக நம்முடைய தமிழக அரசு சமச்சீர் வளர்ச்சி நிதியம் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி 422 திட்டங்களைக்கு அரசு ஒதுக்கியுள்ள தொகை ரூ.282.22.கோடியாகும். ஊரக பகுதியில் இருக்கும் 105 வட்டாரங்களை தேர்வு செய்து அங்கு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. அதேபோல மலைப்பகுதி வளர்ச்சிக்கான சிறப்பு பகுதி மேம்பாட்டித்திட்டத்தை உருவாக்கி அதற்காக ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. நேற்றைய ஆய்வின் போது வனப்பகுதியில் உள்ள சாலைகளை மேம்படுத்த வேண்டும், தார்சாலைகளாக மாற்ற வேண்டும் என மதிப்பீட்டுக்குழு உறுப்பினர்கள் நல்ல ஆலோசனைகளை வழங்கினர். அதன்படி அத்திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

அரசுக்கும், பொதுமக்களுக்கும் பாலமாக

அரசு கொண்டு வரும் திட்டத்தை விரைவாகவும், வேகமாகவும் நிறைவேற்ற வேண்டும் என்பது மறைந்த தமிழக முதல்வர் அம்மாவின் எண்ணமாகும். தேர்தல் நேரத்தில் கூறிய வாக்குறுதிகளை விரைவுபடுத்தி நிறைவேற்ற வேண்டும் என்பது இங்கு வருகை தந்திருக்கும் மதிப்பீட்டுக் குழுவின் நோக்கமும், கடமையுமாகும். அரசுக்கும் பொதுமக்களுக்கும் ஒரு பாலமாக இருந்து அரசு கொண்டு வரும் திட்டங்களை மதிப்பீடு செய்து அந்த திட்டங்களையெல்லாம் விரைவாகவும், வேகமாகவும் மக்களிடையே கொண்டு சென்று பணியை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் மதிப்பீட்டுக்குழுவின் நோக்கம். எனவே அரசின் நலத்திட்டங்களை அனைத்து தரப்பு மக்களும் பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
இந்த ஆய்வுக்கூட்டத்தில் சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழு உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா(தாம்பரம் சட்டமன்ற தொகுதி) ஆர்.கனகராஜ்(சூலூர்), ஆர்.சக்கரபாணி(ஒட்டன்சத்திரம்), எஸ்.சுதர்சனம்(மாதவரம்), செல்வமோகன்தாஸ் பாண்டியன்(தென்காசி), நந்தகுமார்(அணைக்கட்டு), டாக்டர் பரமசிவம்(வேடசந்தூர்), பாஸ்கர்(நாமக்கல்), மணோன்மணி(வீரபாண்டி), ராஜேஷ்குமார்(கிள்ளியூர்), ஜெயந்தி பத்மநாபன்(குடியாத்தம்), மாவட்ட வருவாய் அலுவலர் தெ.பாஸ்கரபாண்டியன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வளர்ச்சிப்பணிகள் ஆய்வு

அதனைத்தொடர்ந்து சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக் குழுவானது ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோழிப்பண்ணை பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ரூ.143 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்ட கோழிப்பண்ணை கோட்டேஸ் சாலையினையும், நடுவட்டம் பேரூராட்சிக்குட்பட்ட அனுமாபுரம் பகுதியில் தலா ரூ.2.10 லட்சம் வீதம் கட்டப்பட்டு வரும் 7 பசுமை வீடுகளையும், நடுவட்டம் பகுதியில் பொதுநிதி திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகம் கட்டும் பணியினையும் மதிப்பீட்டுக்குழுவினர் ஆய்வு செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago