முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 30ல் போலியோ சொட்டு மருந்து முகாம் கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தகவல்

வியாழக்கிழமை, 27 ஏப்ரல் 2017      கன்னியாகுமரி

 

போலியோ இல்லாத பொன்னுலகம் படைப்போம். குழந்தைகளை தாக்கும் இளம்பிள்ளை வாதம் என்ற போலியோ நோயை உலகிலிருந்து முற்றிலுமாக அழித்து போலியோ இல்லாத பொன்னுலகம் படைத்திடுவோம 

போலியோ இல்லா

 1995-ம் ஆண்டு முதல் இளம்பிள்ளைவாத நோயை முற்றிலுமாக அகற்ற ஆண்டிற்கு இருமுறை சிறப்பு சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தால் 2014-ம் ஆண்டு மார்ச் 27-ம் நாள் இந்தியா போலியோ இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது. இந்த வருடம் போலியோ சிறப்பு சொட்டு மருந்து முகாம் முதற்கட்டமாக ஏப்ரல் 2-ம் தேதி நடைபெற்ற முகாமில் 1,52,245 குழந்தைகள் பயன்பெற்றனர்.

 பயன்பெறும் குழந்தைகள்

இம்மாவட்டத்தில் வரும் 30.04.2017 நடைபெறும் இரண்டாவது தவணை முகாமில் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இளம்பிள்ளைவாத தடுப்புச் சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது கட்ட முகாமில் 153000 குழந்தைகள் பயன்பெற உள்ளனர்.

முகாம்கள் ஏற்பாடு

இம்முகாம்கள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள், நகர்புற மற்றும் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், நகராட்சி மருத்துவ மனைகள் மற்றும் தனியார் மருத்துவ மனைகள் என 1,236 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 4,944 பணியாளர்கள் (பொது சுகாதாரம் துறை, ஊட்டச்சத்து துறை, உள்ளா£சி துறை, கல்வித்துறை மற்றும் தன்னார்வலர்கள்) பணியில் உள்ளனர். இது தவிர முகாம் நடைபெறும் இடங்களுக்கு குளிர்பதன முறையில் சொட்டு மருந்து கொண்டு செல்ல 233 ஊர்திகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவையான சொட்டு மருந்து மாவட்ட துணை இயக்குநர், சுகாதாரப்பணிகள் அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகராட்சியில் உரிய குளிர்பதன முறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

பல்வேறு இடங்களில்

மக்கள் கூடும் இடங்களான புகைவண்டி நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பூம்புகார் படகுத்துறை மற்றும் காந்திமண்டபம் ஆகிய இடங்களில்; 17 முகாம்களும், உரிய பேருந்து வசதி இல்லாத மலைப்பகுதிகளில் நடமாடும் குழுக்கள் 8-ம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோட்டமலை மற்றும் தச்சமலை பகுதிகளுக்கு படகுகளில் சென்று சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. முகாம் ஆய்வுப் பணிகளுக்கு 156 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பயனடைய வேண்டுகோள்

மாவட்டத்திலுள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சொட்டு மருந்து கொடுக்கும் பணியாளர்களுக்கு (பொது சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள்) பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து துறையைச் சார்ந்த பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் ஒத்துழைப்போடு போலியோ சொட்டு மருந்து முகாம் சிறப்புற நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வரும் 30.04.2017 நடைபெறும் இரண்டாவது தவணை முகாமில்;, 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுத்து பயன்பெறுமாறு கலெக்டர் சஜ்ஜன் சிங்; ரா. சவான் தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்