முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடியுடன் இலங்கை பிரதமர் ரணில் சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்த ஆலோசனை

வியாழக்கிழமை, 27 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  -  இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஐந்து நாள் பயணமாக இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  இந்தியா வந்தார். மாலை 5 மணியளவில் டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்திற்கு வந்த அவருக்கு இந்திய அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் ரணிலுடன் அவரது மனைவி மைத்ரி விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகளும் வந்துள்ளனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இலங்கைப் பிரதமர் ரணில் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையின் போது பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 திருகோணமலை
 திருகோணமலையில் இந்தியாவின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படவிருக்கும் துறைமுக வளர்ச்சித் திட்டங்கள் குறித்து இந்தப் பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, வரும் மே மாதம் 11, 12ஆம் தேதிகளில் இலங்கையில் நடைபெறும் புத்த ஜெயந்தி விழாவிற்கான அழைப்பை பிரதமர் மோடியிடம் ரணில் விக்கிரமசிங்க விடுத்தார். இதனைத் தொடர்ந்து மோடி இலங்கை செல்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட உள்ளன.

சுஷ்மாவுடன்
முன்னதாக, இலங்கைப் பிரதமர் ரணில், இந்திய வெளி விவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை நேற்று காலை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையில் இலங்கை தமிழர் விவகாரம் மற்றும் தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு, படகுகள் மீட்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காங்கிரஸ் தலைவர்களுடன்
இந்திய பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்களுடனான சந்திப்பிற்கு பின்னர், இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஆகியோரையும் சந்தித்து பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்