முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முள்ளண்டிரம் கிராமத்தில் 5880 பயனாளிகளுக்கு ரூ.3.92 கோடி மதிப்பிலான நலதிட்ட உதவிகள்: அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்

வியாழக்கிழமை, 27 ஏப்ரல் 2017      வேலூர்
Image Unavailable

 

 

ஆரணி அடுத்த முள்ளண்டிரம் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 5880 பயனாளிகளுக்கு ரூ.3.92 கோடி மதிப்பிலான நலதிட்ட உதவிகளை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார். ஆரணி அடுத்த முள்ளண்டிரம் கிராமத்தில் புதன்கிழமை மனுநீதி நாள் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கலந்துகொண்டு வருவாய்த்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கால்நடைத்துறை, வேளாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை, தாட்கோ உள்பட பல்வேறு துறைகளின் சார்பில் 5880 பயனாளிகளுக்கு ரூ.3கோடியே 91 லட்சத்து 80ஆயிரத்து 864 மதிப்பிலான அரசு நலதிட்ட உதவிகளை வழங்கி பேசியது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விவசாயம், கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தி.மலை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக வறட்சி நிவாரண திட்டத்தின்கீழ் கால்நடை விவசாயிகளுக்கு மானிய விலையில் உலர் தீவனம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் வறட்சி நிலை சீராகும் வரை கால்நடைக்கு தினம் 3 கிலோ வீதம் அதிகபட்சம் 5 கால்நடைகளுக்கு ஒரு வாரத்திற்கு 105 கிலோ வரை விவசாயி ஒருவருக்கு உலர் தீவனம் மானிய விலையில் கிலோ ஒன்றுக்கு ரூ.2 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. என்று பேசினார்.

 

மனுநீதி நாள் முகாம்

மேலும் இதில் வருவாய்த்துறை சார்பில் 2753 பயனாளிகளுக்கு ரூ.81.48லட்சம் மதிப்பிலான சாதிச்சான்றிதழ், வீட்டுமனைபட்டா, முதியோர் மற்றும் இதர உதவித்தொகை, குடும்ப அட்டை, சிறுகுறு விவசாய சான்று, வருமானச்சான்றிதழ், இலவச தையல் இயந்திரம், சலவைப்பெட்டி, வீட்டுமனைபட்டா, கலால் துறை சார்பில் கள்ளச்சாராயம் காய்ச்சி மனம் திருந்திய 38 பயனாளிகளுக்கு ரூ.11.40லட்சம் மதிப்பிலான இலவச கறவை மாடுகள், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் 38 பயனாளிகளுக்கு ரூ.3600 மதிப்பிலான உலர் தீவனம், அகத்திச்செடி உள்ளிட்ட மொத்தம் 5880 பயனாளிகளுக்கு பல்வேறு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, அமைச்சர், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநெரெ ஆகியோர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை நேரடியாக பெற்றுக்கொண்டனர். முன்னதாக முள்ளன்டிரம் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை,

 

 

 

கால்நடை பராமரிப்புத்துறை, சமூகநலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல்துறை, வருவாய்த் துறை, ஊராட்சிகள் துறை, ஆகிய துறைகளின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த அரசின் திட்டங்கள் குறித்த விளக்க கண்காட்சியினை பார்வையிட்டார்கள். மேலும், மனுநீதி நாள் முகாமில் வேளாண்மைத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, சமூகநலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தாட்கோ, கூட்டுறவுத்துறை, மாவட்ட தொழில் மையம், கைத்தறித்துறை ஆகிய துறைகளின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டங்கள் குறித்த விளக்கவுரை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இம்முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி, செய்யார் சார் ஆட்சியர் டி.பிரபுசங்கர், சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியர் ஜோதி, அனைத்து துறை அலுவலர்கள், ஆரணி வட்டாட்சியர் தமிழ்மணி, பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

 

 

 

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago