முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சங்கரநாராயண சாமி கோவிலில் விநாயகர் தேர் வெள்ளோட்டம் பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்தனர்

வெள்ளிக்கிழமை, 28 ஏப்ரல் 2017      திருநெல்வேலி
Image Unavailable

 

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சைவ – வைணவ திருத்தலமாகும்.

பிரபல திருவிழாக்கள்

 இக்கோவிலில் ஆடித்தவசு திருவிழா, சித்திரை திருவிழா உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இக்கோவிலில் ஆடித்தவசு திருவிழா, சித்திரை திருவிழா, திருவாதிரை திருவிழா ஆகிய திருவிழாக்களில் காலை 5 மணிக்கு விநாயகர் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

சிதிலமடைந்த தேர்

 ஆனால் விநாயகர் தேர் கடந்த 25 ஆண்டுகளாக தேர் பராமரிப்பு இன்றி சிதிலமடைந்து இருந்தது. இதனால் விநாயகர் தேர் கடந்த 25 ஆண்டுகளாக ஒடவில்லை. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்தனர். மேலும் விநாயகர் தேரோட்டம் ஒவ்வொரு திருவிழாக்களிலும் நடைபெற வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

நிதி ஒதுக்கிய ஜெயலலிதா

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய முதல் அமைச்சர் ஜெயலலிதா புதிய தேர் செய்ய ரூ 9 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.

வெள்ளோட்டம்

கடந்த 3 ஆண்டுகளாக புதிய தேர் செய்யும் பணி நடைபெற்று இன்று காலை 6மணிக்கு மேல் ரத வீதிகளில் வெள்ளோட்டம் நடைபெற்றது. வெள்ளோட்டத்தை கோவில் துணை ஆணையர் பொன்சுவாமிநாதன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்தனர். இதில் சங்கரன்கோவில் டிஎஸ்பி இராஜேந்திரன், முன்னாள் கவுன்சிலர் ஆனந்த், கோமதிஅம்பிகை மாதர் சங்க தலைவர் பட்டமுத்து உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்