முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணாமலையார் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா ஏற்பாடு

வெள்ளிக்கிழமை, 28 ஏப்ரல் 2017      திருவண்ணாமலை

 

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவண்ணாமலையில் அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் வரும் 10ந் தேதி அன்று சித்ரா பௌர்ணமி விழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு, திருவண்ணாமலையில் சுமார் 15 லட்சம் மக்கள் கிரிவலம் வர வருவார்கள்.

சித்ரா பௌர்ணமி விழா

எனவே மலை சுற்றும் பாதையில் அன்னதானம் வழங்கவுள்ள தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் கீழ்க்குறிப்பிட்டுள்ள கட்டுப்பாடுகளைக் கடைபிடித்து அன்னதானம் வழங்க வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது.

அன்னதானம் வழங்க விருப்பம் உள்ள நபர்கள் 02.05.2017 முதல் 08.05.2017 முடிய அலுவலக வேலை நாட்களில், அலுவலக நேரத்தில் மட்டுமே திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இரண்டாம் மாடியில் அமைந்துள்ள ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று உரிய விவரங்களை சமர்ப்பித்து முன் அனுமதி பெற வேண்டும். நிர்ணயம் செய்யப்பட்ட தேதிக்கு பிறகு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

கிரிவலப் பாதையில் எக்காரணத்தைக் கொண்டும் உணவு சமைக்க கூடாது. எளிதில் தீப்பற்ற கூடிய எரிவாயு சிலிண்டர்கள், விறகு அடுப்புகள், மண்ணெண்ணெய் அடுப்புகள் போன்றவற்றை பயன்படுத்த அனுமதி கிடையாது. அன்னதானத்திற்காக கொண்டுவரப்பட்டுள்ள உணவை வழங்கிட மட்டுமே அனுமதிக்கப்படும். மேலும், கொண்டுவரப்படும் உணவு பொருட்கள் தரமானதாகவும், தூய்மையானதாகவும் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும்.

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அத்தியந்தல், ஆணாய்பிறந்தான், ஆடையூர், அடிஅண்ணாமலை மற்றும் வேங்கிக்கால் ஆகிய கிராம ஊராட்சிகளுக்குட்பட்ட கிரிவலப்பாதையில் தற்காலிக கடைகள் அமைக்கத் தேவையான உரிய முன் அனுமதியினை பெற்ற பின்னரே தற்காலிகள் கடைகள் அனுமதிக்கப்படும். முன் அனுமதி பெறாத கடைகள் மீது காவல் துறை மூலம் மேல் நடைவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், தற்காலிக கடைகளில் உணவு சமைப்பதற்கும், எளிதில் தீப்பற்ற கூடிய எரிவாயு சிலிண்டர்கள், விறகு அடுப்புகள், மண்ணெண்ணெய் அடுப்புகள் போன்றவற்றை பயன்படுத்துவதற்கும் மற்றும் கற்பூரம் விற்பதற்கும் அனுமதி இல்லை.மேலும் அன்னதானம் வழங்க விண்ணப்பிக்க வரும்போது ஐந்து புகைப்படங்கள் தங்களது முகவரியை தெரிவிக்கும் ஏதேனும் ஒரு சான்று நகல் மற்றும் எத்தனை நபர்களுக்கு அன்னதானம் வழங்க உத்தேசித்துள்ளனர் என்ற விவரங்களை சமர்பிக்க வேண்டும்.

அன்னதானம் வழங்க இருக்கும் நபர்கள் தங்களுக்கென அனுமதிக்கப்பட்டுள்ள இடத்திலும், அனுமதிக்கப்பட்ட தேதியிலும் அன்னதானம் வழங்கி முடிக்க தெரிவித்துள்ள நேரத்திற்குள்ளாகவும் அன்னதானம் வழங்கி முடித்திட வேண்டும்.எக்காரணத்தை முன்னிட்டும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. இலையால் ஆன தொன்னை மற்றும் பாக்கு மட்டை பொருட்களை மட்டுமே அன்னதானம் வழங்க பயன்படுத்த வேண்டும். மேலும் பிளாஸ்டிக் பாக்கெட் மூலம் குடிநீர் விநியோகிக்கக் கூடாது.

அன்னதானம் வழங்கும் அந்த இடத்திலேயே பக்தர்கள் உணவு உண்டுவிட்டு உணவுப் பொட்டலங்களை அங்கே வைக்கப்பட்டுள்ள குப்பைக் கூடையில் போடுவதற்கு ஏதுவாக குப்பைக் கூடைகளை அன்னதானம் அளிக்கும் நபர்களே எடுத்து வர வேண்டும்.அன்னதானம் முடிந்தவுடன் அவ்விடத்தினை சுத்தம் செய்து விட்டு செல்லும் வகையில் உரிய நபர்களை உடன் அழைத்து வர வேண்டும்.அன்னதானம் அளிப்பதற்கு உரிய விண்ணப்பத்தினை அளித்து அனுமதி அட்டையைப் பெற்றுகொள்ளாதவர்கள் அன்னதானம் வழங்கினால் அவர்கள் மீது காவல் துறையினர் மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago