முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சங்கரநாராயண சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவக்கம்

வெள்ளிக்கிழமை, 28 ஏப்ரல் 2017      திருநெல்வேலி

 

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம்.

கொடியேற்றம்

 விழா நாள்களில் சுவாமி-அம்பாள் காலை, மாலை, இரவு பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வருவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா சங்கரலிங்கசாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் இன்று (29.4.2017) சனிக்கிழமை காலை 4.30க்கு மேல் 5.00 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி

 முன்னதாக நேற்று (28.4.2017) காலை 8 மணிக்கு ல் சுவாமி பெருங்கோட்டூரில் உள்ள திருக்கோட்டி அய்யனார் கோவிலில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோவில் துணை ஆணையர் பொன்சுவாமிநாதன் உள்ளிட்ட மண்டகப்படிதாரர்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

தேரோட்டம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9ம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை (7.5.2017) அன்று நடைபெறுகிறது. அன்று காலை 5.30 மணிக்கு கோரதம், விநாயகர், சுப்பிரமணியர் பவனியும், காலை 9.00மணிக்கு மேல் 9.30 மணிக்கு மேல் ஸ்ரீ சுவாமி, அம்பாள் தேரோட்டம் தனித்தனியாக நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் லட்சுமணன், துணை ஆணையர் பொன்சுவாமிநாதன் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்