முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

100 சதவீத மானியத்தில் வழங்கப்டும் சொட்டுநீர் பாசனம் அமைக்கும் திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் : கலெக்டர் நந்தகுமார் தகவல்

வெள்ளிக்கிழமை, 28 ஏப்ரல் 2017      பெரம்பலூர்
Image Unavailable

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர். .நந்தகுமார், தலைமையில் பெரம்பலூர் உற்பத்திக் குழு கூட்டம் மற்றும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (28.04.17) நடைபெற்றது.

 வேளாண்மை

 இக்கூட்டத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைபராமரிப்புத்துறை உள்ளிட்ட துறைகளின் அலுவலர்கள் தங்கள் துறைசார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தனர். அதனைத்தொடர்ந்து வேளாண்மை மற்றும் அதனைச்சார்ந்த துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத்திட்டங்களின் மூலம் பயனடைந்து விவசாயத்தில் முன்னேற்றம் கண்டுள்ள விவசாயிகள் தங்களின் அனுபவங்கள் குறித்து மற்ற விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். பின்னர் விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை மாவட்ட கலெக்டர் அவர்களிடம் தெரிவித்தனர்.

குறிப்பாக ஏரிகளில் வண்டல்மண் எடுக்க விண்ணப்பித்து 10 நாட்களுக்குள் மண் எடுக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது. ஆனால் விண்ணப்பத்திற்கான அனுமதி பெறுவதற்கு கால தாமதம் ஆகின்றது என்று தெரிவித்தனர். இதனை கேட்ட மாவட்ட கலெக்டர் இனிவரும் காலங்களில் விண்ணப்பித்த அன்றே அதற்கான அனுமதி வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலை துறையின் மூலமாக சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்துடன் சொட்டுநீர் பாசனம் அமைக்கும் திட்டத்தை விவசாயிகள் அனைவரும் சிறந்தமுறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். வறட்சியான இந்த காலத்தில் குறைந்த அளவு நீரைப்பயன்படுத்தி விவசாயம் செய்ய சொட்டுநீர்பாசனம் முறை சிறந்ததாகும் என்றும், கால்நடைபராமரிப்புத்துறையின் மூலம் வழங்கப்படும் அசோலா தீவனம் வளர்ப்பு முறை குறித்து தங்கள் பகுதிகளில் உள்ள கால்நடை மருந்தகங்களில் விவரங்களை கேட்டு தெரிந்துகொண்டு பயன்பெறாலம் என்றும் மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். பயறு வகைகளில் உளுந்து 3.172 மெட்ரிக் டன்கள் கொள்முதல் செய்யப்பட்டு, தற்போது 4.495 மெட்ரிக் டன்கள் இருப்பில் உள்ளது. துவரை 1.158 மெட்ரிக் டன்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

நிலக்கடலை விதைகள் 3.371 மெட்ரிக் டன்கள் கொள்முதல் செய்யப்பட்டு, தற்போது 7.126 மெட்ரிக் டன்கள் இருப்பில் உள்ளது. தானிய உற்பத்தி இலக்கை அடைவதற்கான செயல்விளக்கம், இடுபொருள் மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய இலக்கீடு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வரப்பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் பணிகள் சிறப்பாக நடைபெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்ற விபரங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். இக்கூட்டத்தில் எறையூர் சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி மாரிமுத்து, வேளாண்மை இணை இயக்குநர் ஆர்.சுதர்சன், கால்நடைபராமரிப்புத்துறை இணை இயக்குநர் செங்கோட்டையன், தோட்டக்கலை உதவி இயக்குநர் இந்திரா மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்