முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு: மதுரை ஐகோர்ட் கிளை பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

வெள்ளிக்கிழமை, 28 ஏப்ரல் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை  - தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கில்  மதுரை ஐகோர்ட் கிளை பிறப்பித்த உத்தரவுக்கு நேற்று சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்தது. மேலும், மூன்று பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.

ஐகோர்டில் வழக்கு
தமிழகத்தில் உள்ள கருவேல மரங்களை அகற்ற, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. தனியார் இடங்களில் அவரவர் செலவில் அகற்ற வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இரண்டு வாரத்திற்கு ஒரு முறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக, ஐ.ஐ.டி குழுவை அமைக்க வேண்டும் என்று வழக்கறிஞர் மேகநாதன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இடைக்கால தடை
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சீமைகருவேல மரங்களை வெட்டுவதற்கு, மதுரை ஐகோர்ட் கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து வழக்கை, மூன்று பேர் கொண்ட அமர்வுக்கு, மாற்றி தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணை வருகின்ற மே 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago