எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காஷ்மீர் - காஷ்மீரில் அமைதி திரும்ப வேண்டுமெனில் மாணவர்கள் பாதுகாப்பு படையினர் மீது கல்லெறித் தாக்குதல் நடத்துவதை விடுத்து கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் திரும்பி கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான நீதிபதிகள் அமர்வு, காஷ்மீ தெருக்களில் பெல்லட் பிரயோகமும் கல்லெறித் தாக்குதலும் நிற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
கல்வி பொங்கும் கோபத்திற்கு தீர்வளிக்கும்
அமர்வில் உள்ள மற்றொரு நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் கூறியபோது, கல்விதான் அங்கு நிலவி வரும் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் தெருக்களில் பொங்கும் கோபத்திற்கு தீர்வளிக்க முடியும் என்றார். ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற பார் அசோசியேஷன் எதிர்வாதம் செய்த போது, பாதுகாப்புப் படையினர் பள்ளிகளிலும் கல்லூரி வளாகங்களிலும் புகுந்து மாணவர்களை அடிக்கின்றனர் என்றனர், “மாணவர்களை அடித்தால் அவர்கள் தெருவில் இறங்கி போராடவே செய்வார்கள். கல்லெறி தாக்குதல் என்பது ஒரு எதிர்வினை. காஷ்மீர் மக்களிடம் மத்திய அரசு பேசத் தவறிவிட்டது. தடையற்ற, நிபந்தனையற்ற உரையாடலை காஷ்மீர் மக்கள் எதிர்நோக்குகின்றனர்” என்றது.
வன்முறையைக் கைவிடவேண்டும்
இதற்கு பதில் அளித்த உச்ச நீதிமன்றம் இந்த வழக்கின் மனுதாரர் பார் அசோசியேஷன் முதலில் சம்பந்தப்பட்டவர்கள் வன்முறையைக் கைவிடுவதாக கோர்ட்டில் உறுதியளிக்க வேண்டும் என்றது. மே 9-ம் தேதி வாக்கில் இந்த உறுதி மொழிகள் பதிவு செய்யப்பட்டால், பாதுகாப்புப் படையினரை 15 நாட்களுக்காவது விலக்கிக் கொள்ளுமாறு மத்திய அரசிடம் நீதிமன்றம் அறிவுறுத்த முடியும், இருதரப்பினருமே முக்கிய பிரச்சினைகளை பேச வேண்டும். இரு கைகளையும் தட்டினால்தான் ஓசை, என்று நீதிபதி கவுல் தெரிவித்தார்.
முதலில் பேசுங்கள்
“தொடர்ந்து கல்லெறி தாக்குதல் செய்வது, பள்ளிகளை மூடுவது என்றால் பேச்சு வார்த்தை எப்படி சாத்தியம்? முதலில் பேசுங்கள். பேச்சுவார்த்தைகள் அரசியல் சாசன சட்டக்கத்திற்குள் இருக்க வேண்டும்” என்று தலைமை நீதிபதி கேஹர் தெரிவித்தார். அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி வாதிடும் போது, “பிரிவினைவாதத் தலைவர்களுடன் அரசு பேச்சு வார்த்தை நடத்த முடியாது என்று கூறி மனுதாரர்கள் சமர்ப்பித்த வாக்குமூலத்தை வாசித்தார், அதில் காஷ்மீர் பிரச்சினையை இந்தியா-பாகிஸ்தான் பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டி, “எங்கள் இதயம் காஷ்மீர் மக்களுக்காகவே துடிக்கிறது. ஒட்டு மொத்த மாநிலமும் அரச பயங்கரவாதத்தில் சிக்கியுள்ளது என்று அவர்கள் கூறுவதை நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன். சமீபத்தில் நடந்த தேர்தல் முறைகேடானது என்று அவர்களால் கூற முடியுமா? பிரதமரையும், முதல்வரையும் சந்திப்பதிலிருந்து இவர்களை யார் தடை செய்தது? பேச்சுவார்த்தைகளை அரசியல் தலைவர்கள்தான் முன்னெடுக்க வேண்டும். இந்த நீதிமன்றத்தில் அல்ல” என்றார் ரோத்கி.
வாதப்பிரதிவாதங்களின் ஒரு கட்டத்தில் மனுதாரர்களான பார் அசோசியேஷன், தங்களுக்கு பிரிவினைவாத தலைவர்களிடம் செல்வாக்கில்லை, எனவே கோர்ட்டின் பார்வைகளை தங்களால் அவர்களிடம் கொண்டு செல்ல முடியாது என்று கூறிய போது, நீதிபதி சந்திராசூட், பார் அசோசியேஷன் உரையாடலில் பங்கு கொள்பவராக இங்கு வந்த பிறகு இதிலிருந்து பின் வாங்க முடியாது என்று சுட்டிக்காட்டினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.