முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் நடந்தது

வெள்ளிக்கிழமை, 28 ஏப்ரல் 2017      கிருஷ்ணகிரி
Image Unavailable

 

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் கதிரவன் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (28.04.2017) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பயிர் காப்பீடு, பயிர்கடன், கால்வாய் பராமரிப்பு, ஏரிகள் தூர்வாருதல், வண்டல் மண் எடுப்பது, சாலை சீர் செய்தல், குடிநீர் பிரச்சனை, தடுப்பணை கட்டுதல், கால்நடை மருந்தகம் அமைத்தல், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் 31.03.2017 அன்று பெறப்பட்ட மனுக்களில் 127 மனுக்களில் 100 மனுக்கல் ஏற்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள மனுக்களுக்கு உரிய விவரங்கள்தெரிவிக்கப்பட்டது. இக்குறை தீர்க்கும் கூட்டத்தில் பயிர் காப்பீடு, தோட்டக்கலை துறை, வேளாண்மைத் துறையில் வழங்கப்படும் மானிய தொகை முழு மானியமாக வழங்க வேண்டும். ஏரிலிருந்து மண் எடுக்க அனுமதி வேண்டும். புறம் போக்கு இடங்கிளல் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; என கோரிக்கைகளை விவசாயிகள் தெரிவித்தனர்.

கலெக்டர் பேச்சு

கலெக்டர் பேசும் போழுது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளதையடுத்து பயிர் காப்பீடு குறித்து ஒன்றிய அளவில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் முழுமானியத் தொகை வழங்க வேண்டும் என கோரியுள்ளீர்கள். இது குறித்து விவசாயிகள் தீர்மானம் நிறைவேற்றி தரும் பட்சத்தில் அரசுக்கு கருத்துரை அனுப்பி வைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் எடவனஅள்ளி அருகில் உள்ள ஏரியில் உள்ள நீர் வரத்து கால்வாய்யை சரிசெய்து சாத்திய கூறுகள் உள்ள இடத்தில் தடுப்பனை கட்டுவது குறித்து ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் புறம்போக்கு இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு ஏரிகளில் நீர் வரத்து கால்வாய்களை வழிமறித்து வரத்து நீரை தவறாக பயன் படுத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

நாகராசம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் பொதுமக்கள் பயன்பாடு கருதி பேருந்து நிழல் கூடம் அமைக்கவும், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பழுதான சாலைகளை சரிசெய்யவும், குடிநீர் பிரச்சினை குறித்து தேவையான குடிநீர் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலமாக டேங்கர் லாரிகள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சி.கதிரவன் விவசாயிகள் கூட்டத்தில் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் சங்கரன், தோட்டகலை துறை, இணை இயக்குநர் ராஜமுகமது, இணை இயக்குநர், வேளாண்மை பொறியியல் துறை, செயற்பொறியாளர் வேணுகோபால், உதவி வன பாதுகாவலர் பிரியதர்ஷினி, வேளாண் விற்பனை துணை இயக்குநர் காளியப்பன், துனை பதிவாளர் ( கூட்டுறவு சங்கம்),ரவிசந்திரன் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்