முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோபியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பொதுமக்களிடமிருந்து பல்வேறு வகையான 762-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்

வெள்ளிக்கிழமை, 28 ஏப்ரல் 2017      ஈரோடு
Image Unavailable

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், கே.எம்.எஸ். திருமண மண்டபத்தில் மக்கள் குறைதீர்க்கும்  கூட்டம் மாவட்ட கலெக்டர் க்டர்.எஸ்.பிரபாகர்   முன்னிலையில்  பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  தலைமையில் நடைபெற்றது. க்கூட்டத்தில் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்களிடமிருந்து பல்வேறு வகையில் 762 எண்ணிக்கையிலான கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

762 மனுக்கள்

இம்மக்கள் குறைதீர்க்கும்  கூட்டத்தில்  பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  பெரியகொடிவேரி பேரூராட்சி, சி.என்.பாளையம், கோபிசெட்டிபாளையம், நம்பியூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள், கொங்கர்பாளையம், வாணிப்புதூர், நம்பியூர், எலத்தூர், சிறுவலூர், காசிபாளையம், கடத்தூர், கோபிநகரம், குள்ளம்பாளையம், சணம், வேமாண்டம்பாளையம், கொளப்பலூர் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த வருவாய் கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களிடமிருந்து  முதியோர்  உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, புதிய குடும்ப அட்டை, கல்விக்கடன், தொழில் கடன்,  குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து  மொத்தம் 762 மனுக்களை   பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட  உத்தரவிட்டார்.

இம்மக்கள் குறைத்தீர்க்கும்  கூட்டத்தில் கோபி வட்டாட்சியர் கு.குமரேசன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் தமிழ்செல்வி, உதவி இயக்குநர் (வேளாண்மை) பழனிசாமி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சிங்காரவேலு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) தே.ராம்குமார், கோபிசெட்டிபாளையம், கூகலூர், சிறுவலூர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினைச் சேர்ந்த மருத்துவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago