முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை ஆரப்பாளையத்தில் புதிய உயர்மட்ட பாலம் 3 - அமைச்சர்கள் நேரில் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 28 ஏப்ரல் 2017      மதுரை
Image Unavailable

மதுரை, -           மதுரை ஆரப்பாளையத்தில் கட்டப்பட்டு வரும் புதிய உயர்மட்ட பாலப்பணிகளை அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
 மதுரை மாநகராட்சி ஆரப்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலத்தினை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் முன்னிலையில் மாநகராட்சி ஆணையாளர் சந்தீப் நந்தூரி தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் , பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி  ஆகியோர் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
 மதுரை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், சாலைப் போக்குவரத்தினை மேம்படுத்து வதற்காகவும்,  வைகையாற்றின் குறுக்கே இரண்டு இடங்களில் தரைமட்டப் பாலங்களை மாற்றி உயர்மட்டப் பாலங்களாக கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு நகர் மற்றும் ஊரமைப்புத் துறையின் மூலம் உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி பெறப்பட்டு வைகையாற்றின் குறுக்கே சிம்மக்கல் மற்றும் செல்லூர் பகுதியினை இணைப்பதற்காக திருமலைராயர் படித்துறையில் உள்ள தரைப்பாலத்தினை உயர்மட்டப் பாலமாக மாற்றியமைக்க ரூ.12.40 கோடி மதிப்பீட்டில் 192.00 மீட்டர் நீளத்தில் 9.00 மீட்டர் அகலத்தில் ஒரு பாலமும், ஆரப்பாளையம் மற்றும் அருள்தாஸ்புரம் பகுதிகளை இணைப்பதற்காக அருள்தாஸ் புரத்திலிருந்த தரைப்பாலத்தினைஉயர்மட்டப் பாலமாக மாற்றியமைக்க ரூ.18.00 கோடி மதிப்பீட்டில் 324.00 மீட்டர் நீளத்தில் 9.00 மீட்டர் அகலத்தில் ஒரு பாலமும் கட்டப்பட்டுள்ளது.
     இவ்விரு பாலங்களும் ஓரே கால கட்டத்தில் பணிகளை துவங்கி முடிக்கப்பட்டு தற்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சரால் வருகிற 5 - ம் தேதி திறந்து வைக்கப்பட உள்ளது. எனவே கட்டப்பட்டு வரும் பாலங்களின் இறுதி கட்டப்பணியினை அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு விரைவில் பணிகளை முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர்.
 இந்த ஆய்வில் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன்செல்லப்பா, நகரப்பொறியாளர் மதுரம், உதவி ஆணையாளர் அரசு, செயற்பொறியாளர் சந்திரசேகரன், மக்கள் தொடர்பு அலுவலர்கள் செந்தில் அண்ணா, சித்திரவேல், பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்