முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் வருகிற 30ம் தேதி நடக்கிறது : கலெக்டர் பழனிசாமி தகவல்

வெள்ளிக்கிழமை, 28 ஏப்ரல் 2017      திருச்சி

திருச்சிராப்பள்ளி மாவட்டம் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் வருகிற 30.04.2017(ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற உள்ளது என மாவட்ட கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி. தெரிவித்துள்ளார்.

போலியோ முகாம்

உலக சுகாதார நிறுவனம் மற்றும் மத்திய மற்றும் மாநில அரசின் உதவியுடன் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 30.04.2017 அன்று தீவிர போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளது. கடந்த 13.01.2011 முதல் இன்று வரை இந்தியாவில் போலியோ நோயின் தாக்கம் இல்லை. இதை தொடர்ந்து இந்நிலையினை தக்க வைத்து கொள்வதற்கும், போலியோ நோயை அறவே ஒழிப்பதற்கும் இந்த முறையும் மிகவும் சிரத்தையோடு பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படவுள்ளது.

 திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் கிராமப்புறங்களில் 1412 மையங்களிலும், திருச்சி மாநகராட்சியில் 232 மையங்களிலும், துறையூர் நகராட்சியில் 21 மையங்களிலும், மணப்பாறை நகராட்சியில் 27 மையங்களிலும், மொத்தம் 1692 மையங்களில் சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இரண்டாவது தவணையாக 30.04.2017 அன்றும்; பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. மேலும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து நகர் நல மையங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.

 ஸ்ரீரங்கம், குணசீலம், சமயபுரம், வயலூர் ஆகிய கோயில்கள், மசூதிகள் தேவாலயங்கள் மற்றும் அனைத்து பேருந்து நிலையங்கள், இரயில்வே நிலையங்கள், விமான நிலையம், முக்கொம்பு போன்ற சுற்றுலாதலங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க 53 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்து வர இயலாத இடங்களில் அவர்களுக்கு 70 நடமாடும் குழுக்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரயில்வே நிர்வாகத்துடன் இணைந்து திருச்சியிலிருந்து செல்லும் மற்றும் திருச்சி வழியாக செல்லும் அனைத்து ரயில்களில் 30.04.2017 அன்று ரயில் பயணம் செய்யும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமில் 516 சுகாதார பணியாளர்கள், 2 ஆயிரத்து 166 அங்கன்வாடி மற்றும் சமுதாய பணியாளர்கள் 683 கல்லூரி மாணவர்கள், 20 ரோட்டரி சங்கங்கள், 29 அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், 3 ஆயிரத்து 113 தன்னார்வ பணியாளர்கள், 199 மேற்பார்வையாளர்கள் மற்றும் 15 மாவட்ட இரண்டாம் நிலை அலுவலர்கள்; மொத்தம் 6741 பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட உள்ளனர்.

30.04.2017 அன்று கிராமப்புறங்களில் 1 இலட்சத்து 75 ஆயிரத்து 112 குழந்தைகளுக்கும், நகர்புறங்களில் 94 ஆயிரத்து 166 குழந்தைகளுக்கும், ஆக மொத்தம்; 2 இலட்சத்து 69 ஆயிரத்து 278 குழந்தைகளுக்கு சொட்டு 0மருந்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இடம் பெயர்ந்து குடியிருப்போர் மற்றும் அகதிகள் முகாமில் உள்ள குழந்தைகள் 531 பேர்களுக்கும் 30.04.2017 அன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. ஆக மொத்தம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 2 இலட்சத்து 69 ஆயிரத்து 809 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே எத்தனை முறை சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும், வருகிற 30.04.2017 அன்று நடைபெறும் முகாமில் தவறாமல் சொட்டு மருந்து கொடுப்பது போலியோ நோயிலிருந்து முழு பாதுகாப்பை அளிக்கும். எனவே தாய்மார்கள் அனைவரும் தங்கள் பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளையும் அருகில் உள்ள போலியோ சொட்டு மருந்து மையத்திற்கு அழைத்துச்சென்று தவறாமல் போலியோ சொட்டு மருந்து போட்டு பயனடையலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி. தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago