முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் மாவட்டத்தில் 86200 குழந்தைகளுக்கு தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் : கலெக்டர் கோவிந்தராஜ் தகவல்

வெள்ளிக்கிழமை, 28 ஏப்ரல் 2017      கரூர்

கரூர் மாவட்டத்தில் நாடு தழுவிய தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் இரண்டாம் தவணையாக 30.04.2017 (ஞாயிறு) அன்று நடைபெறவுள்ளது.

 இம்முகாம் தொடர்பாக மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 22.03.2017 அன்று நடைபெற்றது. சுகாதாரப் பணிகள், துணை இயக்குநர், மரு. வே. நளினி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் வர்த்தக சங்க நிர்வாகிகள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், மருத்துவ சங்க பிரதிநிதிகள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கிராமப்பகுதிகள்

இதில் திட்டத்தை செயல்படுத்தும் பொருட்டு, நம் கரூர் மாவட்டத்தில் 921 மையங்களில் (கூடுதல் மையங்கள் உட்பட) சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற உள்ளன. அதில், கிராமப்பகுதியில் 837, நகராட்சிப்பகுதியில் 84 சொட்டு மருந்து மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இம்முகாம் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும்.

இம்முகாமில் 5 வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் இதற்கு முன் எத்தனை தடவை சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் மீண்டும் ஒரு முறை இச்சொட்டு மருந்து கூடுதல் தவணையாகக் கொடுக்கப்படுகிறது. சமுதாயத்திலிருந்தே போலியோ நோய் கிருமியை இல்லாமல் செய்வதே இத்திட்டத்தின் தலையாய நோக்கமாகும்.

இந்தியாவில் கடந்த 74 மாதங்களாக (13.1.2011 க்கு பிறகு) போலியோ நோய் பாதிப்பு ஏதும் இல்லை. தமிழ்நாட்டில் கடந்த 12 ஆண்டுகளாக போலியோ நோயினால் எந்த ஒரு குழந்தையும் பாதிக்கப்படவில்லை. கரூர் மாவட்டத்தில் 18 ஆண்டுகளாக போலியோ நோயினால் எந்த ஒரு குழந்தையும் பாதிக்கப்படவில்லை. இதே நோயற்ற நிலையை தக்கவைத்துக்கொள்ள 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் நாடுதழுவிய தீவிர போலியோ சொட்டுமருந்து போடப்படும் நாளான 30.04.2017 அன்று விடுபடாமல் சொட்டுமருந்து போடவேண்டியது மிக அவசியமாகும்.

எனவே, இங்குள்ள குழந்தைகளுடன் இடம் பெயர்வோர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கட்டுமானப் பணிகள் மற்றும் இதர பணிகளுக்காக தற்காலிகமாக குடி வந்தோர் தங்கியுள்ள பகுதிகளில் உள்ள குழந்தைகளிலும் ஒரு குழந்தை கூட விடுபடாமல் சொட்டு மருந்து போடுவது அவசியமாகிறது. மேலும் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் விடுபடாமல் சொட்டுமருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இம்முகாமினை சிறந்த முறையில் செயல்படுத்தும் பொருட்டு பல்வேறு அரசுத்துறை மற்றும் தன்னார்வ அமைப்புக்களை சேர்ந்த பணியாளர்கள் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஊட்டச்சத்து பணியாளர்கள் போன்ற துறைகளைச் சார்ந்த சுமார் 3794 நபர்கள் இம்முகாம் பணியில் பங்கேற்க உள்ளனர். இம்முகாம் பணிகளை கண்காணிப்பதற்காக சுமார் 112 மேற்பார்வையாளர்கள் பணிக்கப்பட்டுள்ளனர்.

இம்முகாமில் கடந்த முறை சொட்டு மருந்து முகாம் நடைபெற்ற அதே இடங்களிலும் மற்றும் கூடுதலாகவும் இந்த ஆண்டும் முகாம் நடைபெறும். அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தேர்வு செய்யப்பட்ட துணை சுகாதார நிலையங்கள், குறிப்பிட்ட ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், சில பொது இடங்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் தனியார் குழந்தைகள் மருத்துவமனைகள் ஆகியவை சொட்டு மருந்து மையங்களாக செயல்படும்.

வெளியூர் பயணம் செய்யும் மக்களும் பயன்பெற ஏதுவாக பேருந்து நிலையங்கள் ரயில் நிலையம் ஆகிய இடங்களில் உள்ள முகாம்கள் 30.04.2017 முதல் 3 தினங்களுக்கும் இடைவிடாமல் 24 மணிநேரமும் செயல்படும். இந்த கூசயளேவை க்ஷடிடிவா கரூர் நகராட்சில் 3 இடங்களிலும் குளித்தலை நகராட்சியில் 1 இடத்திலும் செயல்படும்.

மாவட்டத்தில் எந்த ஒரு இடத்திலும் ஒரு குழந்தை கூட விடுபடாமல் சொட்டு மருந்து வழங்கப்பட்டால்தான் இத்திட்டத்தின் நோக்கம் முழுமையடையும். ஆகவே, பெற்றோர்கள் அனைவரும் இதனை கருத்தில் கொண்டு தங்களுடைய குழந்தைகளுக்கு 30.04.2017 அன்று அருகில் உள்ள சொட்டு மருந்து மையங்களுக்கு சென்று சொட்டு மருந்து பெற்று பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் கு. கோவிந்தராஜ், கேட்டுக் கொள்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago