முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம்

வெள்ளிக்கிழமை, 28 ஏப்ரல் 2017      சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது எனபெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் முனைவர்.தா.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

1624 சொட்டுமருந்து மையங்கள்

கடந்த 22 வருடங்களாக அகில இந்திய அளவில் கூடுதல் போலியோ சொட்டுமருந்து முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு 02.04.2017 அன்று முதல் தவணை போலியோ சொட்டுமருந்து முகாம்கள் நடைபெற்றன. அதில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 7,55,938 குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து கொடுக்கப்பட்டது. இரண்டாவது தவணை 30.04.2017 அன்று நடைபெறவுள்ளது.இரண்டாம் தவணை போலியோ சொட்டுமருந்து முகாம் நடைபெறும் நாளான 30.04.2017 அன்று பெருநகர சென்னை மாநகரில் 5 வயதிற்குட்பட்ட சுமார் 7.00 இலட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து கொடுப்பதற்கு 1624 சொட்டுமருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இரண்டாம் தவணை போலியோ சொட்டுமருந்து 30.04.2017 அன்று குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு சென்னை மாநகராட்சி நலவாழ்வு மையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், மருந்தகங்கள், சத்துணவு மையங்கள், தனியார் மருத்துவமனைகள், இரயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களில் சொட்டுமருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் மெரினா கடற்கரை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையங்களில் நடமாடும் சொட்டுமருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

போலியோ சொட்டுமருந்து முகாம் காலை 7.00 மணிக்கு தொடங்கி தொடர்ந்து மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.பெற்றோர்கள் தங்கள் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் 30.04.2017 அன்று போலியோ சொட்டுமருந்து போட்டுக் கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் முனைவர்.தா.கார்த்திகேயன், தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்