முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்த்தாத்தா உ.வே.சா.வுக்கு நினைவு இல்லம் அமைத்திட கோரிக்கை

வெள்ளிக்கிழமை, 28 ஏப்ரல் 2017      மதுரை
Image Unavailable

மதுரை.ஏப்.29 கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றம் சார்பில் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் 75ஆம் ஆண்டு நினைவு தினக் கூட்டம் டி.பி.கே.ரோடு நற்பணி மன்ற அலுவலகத்தில் அதன் செயலாளர் மலரகம் சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கவிஞர் மு.முருகேசன் முன்னிலை வகித்தார். நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ ரா.சொக்கலிங்கம் “ஏடுகளைத் தேடியவர்” என்ற தலைப்பில் பேசுகையில் 87 வயது வரை வாழ்ந்த உ.வே.சா.வின் பணி செம்மொழித் தமிழின் மேன்மைக்கு பேருதவியாய் அமைந்தது. அவரது வரலாறு, தமிழ்ப் பணிகளை கண்காட்சியாக அமைத்து சென்னை போன்ற பெருநகரத்தில் நினைவு இல்லமாக அமைத்திட தமிழக முதல்வரை வேண்டுகிறோம்.

 இவர் சிறப்பாக தமிழ் தாத்தா என அறியப்படுகிறார். ஒரு தமிழறிஞர். பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர். உ.வே.சா. 90க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார். உத்தமதானபுரத்தில் உ.வே.சா. வாழ்ந்த இல்லம் தமிழ்நாடு அரசால் நினைவு இல்லமாக்கப்பட்டுள்ளது. உ.வே.சாமிநாதையர் தனது வரலாற்றை என் சரித்திரம் எனும் தலைப்பில் ஆனந்த விகடன் வார இதழில் 1940 முதல் 1942 வரை தொடராக எழுதி வந்தார். இது 1950ஆம் ஆண்டில் தனிப் புத்தக வடிவம் பெற்றது. உ.வே.சா. தமிழுக்கும் இலக்கியத்துக்கும் ஆற்றிய பங்களிப்பினைப் பாராட்டி மார்ச் 21, 1932 அன்று சென்னைப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் அளித்தது என்றார்.

 கூட்டத்தில் ஆர்.ரெங்கசாமி, ஏ.சி.பாபுலால், மீ.ராமசுப்பிரமணியன், வாசகன், பி.ராஜமாணிக்கம், கே.அண்ணாமலை, முனைவர் க.சின்னப்பா, ரெ.கார்த்திகேயன், எம்.சண்முகசுந்தரம், பி.பன்னீர்செல்வம், டி.ஜேக்கப், கே.தெட்சிணாமூர்த்தி, பி.ஜே.மனோகரன், ஜெ.ரவிசங்கர் கலந்து கொண்டனர். தியாகதீபம் அ.பாலு நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்