முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் அட்சயதிருதியை நாளில் 6000 கிலோ தங்க நகைகள் விற்பனை

சனிக்கிழமை, 29 ஏப்ரல் 2017      வர்த்தகம்
Image Unavailable

சென்னை   - அட்சயதிருதியை நாளில் தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரம் கிலோ தங்க நகைகள் விற்பனையானதாக நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.சென்னையில் மட்டும் 2 ஆயிரம் கிலோ தங்க நகைகள் விற்பனை ஆகி உள்ளன.

அட்சய திருதி
அட்சய திருதியை அன்று நகை வாங்கினால் வீட்டில் தங்கம் பெருகும் என்ற எண்ணம் பெண்கள் மனதில் மேலோங்கி வருகிறது. நகை கடை நடத்துபவர்களும் அட்சய திருதியை அன்று நகை வாங்குவோருக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருவதால் அன்றைய தினம் தங்க நகைகளை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

மக்கள் கூட்டம்
ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை வியாபாரம் 1 நாள்தான் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு நேற்றும், இன்றும் 2 நாட்கள் அட்சய திருதியை உள்ளதாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளதால், நகைக்கடைகளில் 2 நாளாக மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. சென்னையில் நகைக் கடைகள் அதிகம் நிறைந்த தியாகராயநகர், அண்ணா நகர், மயிலாப்பூர், புரசைவாக்கம், அடையார், சவுகார் பேட்டை, பாரிமுனை, என்.எஸ்.சி.போஸ் ரோடு, வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், குரோம்பேட்டை, தாம்பரம் ஆகிய இடங்களில் உள்ள நகைக்கடைகளில் பெண்கள் கூட்டம் அலைமோதியது. சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரை அனைத்து நகைக்கடைகளிலும் 2 நாட்களாக தங்க நகை வியாபாரம் அமோகமாக இருந்தது.

35 ஆயிரம் நகைக்கடைகள்
கடைகளில் வாடிக்கையாளர்களை கவர புதுப்புது டிசைன்களில் ஏராளமான நகைகளை அடுக்கி வைத்திருந்தனர். பெண்கள் நல்ல நேரம் பார்த்து நகை வாங்கினார்கள். அட்சய திருதியை அன்று ஏதாவது ஒரு தங்கநகை வாங்க வேண்டும் என்பதற்காக கம்மல், வளையல், செயின், மோதிரம், பிரேஷ்லெட், நாணயம் போன்றவற்றை வாங்கிச் சென்றனர். தமிழகத்தில் 35 ஆயிரம் நகைக்கடைகள் உள்ளன. இதில் சென்னையில் மட்டும் 5 ஆயிரம் நகைக்கடைகள் உள்ளன.

6 ஆயிரம் கிலோ
அட்சயதிருதியை நாளில் சென்னையில் மட்டும் 2 ஆயிரம் கிலோ தங்க நகைகள் விற்பனை ஆகி உள்ளன. தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரம் கிலோ தங்க நகைகள் விற்பனையானதாக நகை வியாபாரிகள் தெரிவித்தனர். இதுபற்றி தங்க-வைரம் நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது:-

அமோக விற்பனை
அட்சய திருதியை நாளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில் நகை விற்பனையாகி உள்ளது. கடந்த ஆண்டு 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தபோது மக்கள் நகைக் கடைக்கு சென்றுதான் அதிக அளவில் நகை வாங்கினார்கள். அந்த அளவு தங்கத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு அட்சய திருதியை 2 நாள் உள்ளதால் கடைகளில் நேற்றும் இன்றும் விற்பனை அமோகமாக உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில் நகை வியாபாரம் நடைபெற்றுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago