முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலைமை நீதிபதி உள்பட 8 நீதிபதிகள் வெளிநாடு செல்ல அனுமதிக்க கூடாது : நீதிபதி கர்ணன் திடீர் தடை

சனிக்கிழமை, 29 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி   - வெளிநாடு செல்ல அனுமதிக்க கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி உள்பட 8 நீதிபதிகளுக்கு நீதிபதி கர்ணன் தடை விதித்து உள்ளார்.

புகார் மனு
சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்த சி.எஸ்.கர்ணன் தற்போது கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதியாக பணியாற்றி வருகிறார். இவர் நீதிபதிகளுக்கு எதிராக பரபரப்பு ஊழல் புகார்களை வெளியிட்டு பிரதமர், ஜனாதிபதி ஆகியோருக்கு புகார் மனு அனுப்பினார்.

கோர்ட்டு அவமதிப்பு வழக்கு
இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்ததுடன் கோர்ட்டில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டது. ஆனால் நீதிபதி கர்ணன் ஆஜராக மறுத்து விட்டார். இதனால் அவருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு வாரண்டு பிறப்பித்தது. அதன்பிறகு நீதிபதி கர்ணன் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜர் ஆனார். அப்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுடன் காரசார வாதத்தில் ஈடுபட்டார். எந்த உத்தரவையும் ஏற்க மாட்டேன் என்று மறுத்தார்.

வெளிநாடு செல்லத் தடை
மேலும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மற்றும் 7 நீதிபதிகள் 28-ந்தேதி தன் முன் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி கர்ணன் உத்தரவிட்டார். அதன்பிறகு அவர் நேற்று முன்தினம் புதிய உத்தரவுகள் பிறப்பித்தார். அதில் நேற்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஆஜராகாததால் அவர்கள் மீண்டும் வருகிற 1-ம் தேதி ஆஜராக வேண்டும். அத்துடன் தலைமை நீதிபதி உள்பட 8 நீதிபதிகளும் வெளிநாடு செல்ல அனுமதிக்க கூடாது என்று விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.8 நீதிபதிகள் மீதான புகார்கள் மிகவும் மோசமானது. சாதிய ரீதியிலானது, இது சட்டப்படி தண்டனைக்குரியது என்றும் நீதிபதி கர்ணன் தனது உத்தரவில் குறிப்பிட்டு உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்