முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் மையத்தில் கலெக்டர் கே.விவேகானந்தன், பார்வையிட்டார்

சனிக்கிழமை, 29 ஏப்ரல் 2017      தர்மபுரி
Image Unavailable

தருமபுரி மாவட்டம், அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்- ஐ நடைபெறும் தேர்வு மையத்தை கலெக்டர் கே.விவேகானந்தன், நேற்று (29.04.2017)  பார்வையிட்டார்.

ஆசிரியர் தகுதி தேர்வு

தருமபுரி மாவட்டத்தில்  நடைபெறும் ஆசிரியர் தகுதி தேர்வு தாள்- ஐல் ஆண்கள், பெண்கள் என மொத்தம் 9653 பேர் அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அவ்வையர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, விஜய் வித்யாலயா ஆண்கள் மேல்நிலைபள்ளி, விஜய் வித்யாலயா பெண்கள் மேல்நிலைபள்ளி, இண்டூர்                             பி. அக்ரஹாரம் மேல்நிலைப்பள்ளி, பாப்பாரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பச்சமுத்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, விஜய் வித்யாசரமம், டான் மெட்ரிக், டான் போஸ்கோ, பாப்பாரப்பட்டி பரம்வீர் என 22 மையங்களில் இத்தேர்வினை 9653 பேர் ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதுகிறார்கள். அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வாளர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அவசர தேவைக்கு மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. தேர்வில் எவ்வித முறைகேடும் இல்லாமல் நடைபெற கல்வித்துறை சார்பாக 8சிறப்பு வழித்தட அலுவலர்கள் நியமித்து கண்காணித்து வருகின்றன.  இது தவிர மாவட்ட அலுவலர்கள் தலைமையில் 6 பறக்கும் படை கண்காணிப்பு பணியில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். மாற்றுத்திறனாளிகள் 249 பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்- ஐ-ல் கலந்து கொண்டவர்கள் 9272 பேர், தேர்வில் கலந்து கொள்ளாதவர்கள் 381 பேர். தருமபுரி மாவட்டத்தில் நடைபெறும் ஆசிரியர் தகுதித்               தேர்வு தாள் ஐ- னை கண்காணிக்க  வழித்தட அலுவலர்களாக கல்வித்துறை பணியாளர்களும்,  காவல்துறை அலுவலர்கள், சாரண ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், உடல் பரிசோதனை அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  மேலும் நாளை நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-ஐஐ-  26802 பேர் 57  தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.

இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர்  அ. சங்கர், கோட்டாட்சியர்  இராமமூர்த்தி, முதன்மை கண்காணிப்பாளர்                        பொன்முடி, கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்  காமராஜ்  ஆகியோர் உடனிருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்