முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வு மையங்களை மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்

சனிக்கிழமை, 29 ஏப்ரல் 2017      திருப்பூர்
Image Unavailable

திருப்பூர், பிஷப் உபகாரசாமி அரசு மேல்நிலைப்பள்ளியில்  தமிழ்நாடு  ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வு மையத்தினை மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

7422 பேர் தேர்வு எழுதுகின்றனர்

தமிழ்நாடு  ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு  தாள்-ஐ க்கான தேர்வு 10 தேர்வு மையங்களில் 4462 பேரும், நாளை (30.04.2017) தாள்-ஐஐ 17 தேர்வு மையங்களில் 7422 பேரும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். இன்று நடைபெற்ற முதல் தாளில் 173 பேர் தேர்விற்கு வருகை தரவில்லை. தேர்விற்கு வருகை தந்த 4289 பேர் மட்டும் முதல்தாள் தேர்வை எழுதினார்கள். தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள்ஃ கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 20 தலைமையாசிரியர்களும், துறை அலுவலர், கூடுதல் துறை அலுவலர்கள், 24 முதுகலைஃபட்டதாரி  ஆசிரியர்களும் அறைக் கண்காணிப்பாளர்கள், 254 ஆசிரியர்களும், தேர்வுகளை சோதனையிட 70 ஆசிரியர்களும் 24 காலவர்களும், அலுவலகப் பணிகளுக்காக 70 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

மேலும்,  மாவட்ட கலெக்டர்  தலைமையில் சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டு 10 தேர்வு மையங்களையும் கண்காணிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்ட கலெக்டர்  பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தினை  நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

இந்நிகழ்வின்போது, ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குநர் உஷாலாயா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா.முருகன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்