முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர விவகாரம்: நம்பகத்தன்மையை நிரூபிக்க அனைத்துக்கட்சி கூட்டம் தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி அறிவிப்பு

சனிக்கிழமை, 29 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மையையும், அதன் பாதுகாப்பையும் நிரூபிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை விரைவில் கூட்டப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி தெரிவித்துள்ளார்.

முறைகேடு
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்களின் குற்றச்சாட்டு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவே மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் வேண்டாம் என்று கூறி வந்தார். தற்போது உத்தரப்பிரதேச மாநில தேர்தலுக்கு பிறகு இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. சமீபத்தில் 5 மாநில சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்டம் ஆகிய மாநிலங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளது என்று பகுஜன்சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றஞ்சாட்டினார். அதோடுமட்டும் அல்லது இந்திய தேர்தல் ஆணையத்திடமும் புகார் செய்தார். இதுதொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாகவும் அறிவித்தார். இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் ஆதரவு தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்திலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு நடந்துள்ளது என்று ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் புகார்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுவது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரசும் கூறிவருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றிபெற்றபோதிலும் எந்தவித விசாரணைக்கும் தயார் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல்பாடு குறித்து தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சிகள் சேர்ந்து புகார் செய்தன. இப்படி புகார் அடிக்கடி கூறப்பட்டு வருவதால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்தவித தில்லுமுல்லுக்கும் இடமிமல்லை என்பதையும் அது நம்பகத்தனமானது என்பதை நிரூபிக்கவும் சர்வகட்சி கூட்டத்தை விரைவில் கூட்டப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி தெரிவித்துள்ளார்.

உறுதி சீட்டு
தேர்தல் முறையில் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் வரும் தேர்தல்களில் வாக்காளர்களுக்கு தாம் யாருக்கு வாக்களித்தோமோ அந்த வாக்கு அவருக்கு போய் சேர்ந்துள்ளதா என்பதை அறியவும் வாக்குப்பதிவு நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்கச்செய்யவும் வாக்காளர்கள் வாக்களித்த பின்னர் அவர்களுக்கு உறுதி சீட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் இருந்து வெளிவரும்படி செய்யப்படும் என்று நசீம் ஜைதி நேற்று புதுடெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.

நிரூபிக்கப்படும்
இதற்காக சர்வகட்சி கூட்டத்தை விரைவில் கூட்டப்படும். கூட்டத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் யாருக்கும் சாதகமாக இருக்கும்படி செய்ய முடியாது என்பதையும் தொழில்நுட்பம் ரீதியாக  வாக்குப்பதிவு இயந்திரம் மிகவும் பாதுகாப்பானது என்பதையும் நிரூபிக்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் புகார் கூறியிருப்பதையும் தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர வேண்டும் என்று 16 எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்திருப்பதையும் குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த நசீம் ஜைதி மேற்கண்டவாறு கூறினார்.

15 லட்சம் இயந்திரங்கள்
எதிர்க்கட்சிகளின் இந்த புகாரை தேர்தல் கமிஷன் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு மின்னணு இயந்திரம் நம்பகத்தன்மையானது என்பதை நிரூபிக்கும் நேரம் குறித்து தேர்தல் கமிஷன் முடிவு செயல்பட்டு வருகிறது.  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து யாராவது சந்தேகம் எழுப்பினாலோ, புகார் கூறினாலோ, அதை மறுக்கும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் நம்பகத்தன்மையானது என்பதை நிரூபிக்க தயார் என்று வெளிப்படையாகவே சவால் விட தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. நாம் யாருக்கு வாக்களித்தோமோ அந்த வாக்கு அவருக்கே போய் சேர்ந்துள்ளது என்பதை வாக்களித்தவர்கள் அறிந்துகொள்ளும்படி அடையாள சீட்டு வெளியே வரும்படி செய்யும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்க தேர்தல் கமிஷன்  ஆர்டர் கொடுத்துள்ளது. இதுதொடர்பாக சுமார் 15 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்க பொதுத்துறை நிறுவனங்களான பாரத் எல்க்ட்ரானிக்ஸ் லிமிடெட், எல்க்ட்ரானிக்ஸ் கார்பரேஷன் ஆப் இந்தியா ஆகிய கம்பெனிகளிடம் ஆர்டர் கொடுத்துள்ளோம்.

முதல் நாடாக ...
இதற்கான நிதியையும் பெற்றுள்ளோம். வரும் 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் இந்த இயந்திரங்கள் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனிமேல் நடக்கவிருக்கும் அனைத்து தேர்தல்களின் இந்தவகையான இயந்திரங்களைத்தான் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். உலகத்திலேயே இந்தியாதான் முதன் முதலாக அனைத்து தேர்தல்களில் [விவிபிஎடி] வகையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனைத்து தேர்தல்களிலும் பயன்படுத்தும் முதல்நாடாக இருக்கலாம். இதன் மூலம் தேர்தல் முறையானது வெளிப்படையாகவும் மக்களிடத்தில் நம்பிக்கையை ஊக்குவிப்பதாகவும் இருக்கும் என்று தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்