முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலியல் பலாத்கார வழக்கில் உ.பி முன்னாள் அமைச்சர் பிரஜாபதிக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி சஸ்பெண்ட்

சனிக்கிழமை, 29 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

லக்னோ  - பாலியல் பலாத்கார வழக்கில் உ.பி. முன்னாள் அமைச்சர் காயத்ரி பிரஜாபதிக்கு ஜாமீன் வழங்கிய லக்னோ கோர்ட்டு நீதிபதியை அலகாபாத் ஐகோர்ட்டு சஸ்பெண்ட் செய்தது.

நீதிமன்றம் ஜாமீன்
உ.பி.யில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான முந்தைய அரசில் அமைச்சராக இருந்தவர் காயத்ரி பிரஜாபதி. இவரும் இவரது சகாக்கள் சிலரும் கடந்த 2014-ல் 35 வயது பெண் ஒருவரை பலாத்காரம் செய்ததாகவும் அவரது மகளிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த மார்ச் 15-ம் தேதி பிரஜாபதி கைது செய்யப்பட்டார். பிரஜாபதி மற்றும் அவரது சகாக்கள் இருவருக்கும் சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. காயத்ரி பிரஜாபதி மற்றும் அவருடைய சகாக்களுக்கு பாலியல் குற்றங்களில் இருந்து சிறார்களை பாதுகாக்கும் (போஸ்கோ) நீதிமன்ற நீதிபதி ஒம் பிரகாஷ் மிஸ்ரா கட செவ்வாய் கிழமை ஜாமீன் வழங்கினார்.

ஐகோர்ட்டு சஸ்பெண்ட்
இந்த உத்தரவை ரத்து செய்யும்படி அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு மேல்முறையீடு செய்தது.  இதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு காயத்ரி பிரஜாபதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை நிறுத்தி வைத்தது உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இப்போது பாலியல் பலாத்கார வழக்கில் உ.பி. முன்னாள் அமைச்சர் காயத்ரி பிரஜாபதிக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதியை அலகாபாத் ஐகோர்ட்டு சஸ்பெண்ட் செய்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago