முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியலில் நேர்மை ஒழுக்கம் கடைபிடித்து நாடாளுமன்றத்தில் மக்களின் உரிமைக்காக ஆனித்தரமாக வாதிட்டவர் இரா.செழியன் ரசியல் கட்சி தலைவர்கள், நீதியரசர்கள், பிரமுகர்கள் பாராட்டு

சனிக்கிழமை, 29 ஏப்ரல் 2017      வேலூர்
Image Unavailable

அரசியலில் நேர்மை தூய்மை ஒழக்கத்தினை கடைபிடித்து நாடாளுமன்றத்தில் மக்களின் உரிமைக்காக ஆனித்தரமாக வாதிட்டவர் முன்னாள் எம்பி இரா.செழியன் என்று அரசியல்கட்சி தலைவர்கள், நீதியரசர்கள், கல்வியாளர்கள், விஐடி வேந்தர் டாக்டர் .ஜி.விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற இரா.செழியனின் 95வது பிறந்த நாள் விழாவில் அவரை பாராட்டி வாழ்த்து தெரிவித்து பேசினர்.நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் விஐடி பல்கலைக்கழகத்தின் கவுரவ பேராசிரியருமான இரா.செழியனின் 95வது பிறந்த நாள் விழா சென்னையில் உள்ள பாம்குரோவ் ஒட்டல் அரங்கில் நடைபெற்றது.

பிறந்த நாள் விழா

 இவ்விழாவிற்கு  விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் தலைமை வகித்து பேசியதாவது:15 ஆண்டுகாலம் நாடாளுமன்றத்தின் மக்களவையிலும் 6 ஆண்டுகள் மாநிலங்களவையிலும் உறுப்பினராக இருந்து மக்களின் உரிமைக்காக பணியாற்றியவர் இரா.செழியன் ஆவார். பாராளுமன்றத்தினை எவ்வாறு நடத்த வேண்டும் அதன் உரிமைகள் நடைமுறைகள் என்ன என்பதனை முழுமையாக அறிந்து செயல்பட்டவர். அதில் ஏதாவது சந்தேகங்கள் வந்தால் ஆட்சியாளர்கள் எதிர்கட்சியினர் அது பற்றி இரா.செழியனிடம் கேட்டு தெரிந்து கொள்ளும் வகையில்   மற்றவர்களுக்கு எடுத்து காட்டாக விளங்கியவர்.  நானும் இரா.செழியனும் ஆண்டு காலம் பாராளுமன்ற உறுப்பினர்களாக பணியாற்றிய போது நாட்டில் செல்வாக்கு மிக்கதலைவர்களாக விளங்கிய தலைவர்கள் அத்தனை பேரும் அங்கு இருந்தனர். அவர்கள் அனைவரும்  செழியனின் கருத்தை ஏற்றுக்கொள்ளும் வகையில் அவரது பணிகள் இருந்தது. பேரறிஞர் அண்ணாவுடன் நெருங்கி தொடர்பு கொண்டவர். அண்ணா சொல்வார் உங்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் என்னை தேடி வருகிறிர்கள் ஆனால் நான் இரா.செழியனிடம் ஆலோசனை பெறுகிறேன்.   ஆண்டு நாட்டில் அவசரநிலை பிரகடனம் வந்தபோது அதை கடுமையாக எதிர்த்தவர். தமது எதிப்பை பாராளுமன்றத்திலும் ஆனித்தரமான வாதங்கள் மூலமாகவும் பத்திரிகைகளில் கட்டுரைகள் மூலமாகவும் காட்டியவர்.  நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய பணிகள் ஆனித்தரமான உரைகள் எழுதிய கட்டுரைகளை தொகுத்து நூலாக வெளியிட உள்ளோம் என்று வாழ்த்தி பேசினார்.

இவ்விழாவில் இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் முத்த தலைவர் நல்லக்கண்ணு, தேசிய செயலாளரும் எம்பியுமான டி.ராஜா, முன்னாள் எம்பி தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி டி.கே.ரங்கராஜன், தமிழ்மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், காங்கிரஸ் கடசியின் மாநில தலைவர் சு.திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் எம்.கிருஷ்ணசாமி,  பாரதீய ஜனதா கட்சியின் எச்.வி.ஹண்டே, திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மதிமுக துணை பொது செயலாளர் மல்லை சத்யா, பாமக முன்னாள் மத்திய அமைச்சர் இரா.வேலு,  புதிய நீதிகட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன்,  உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் வேட்டவலம் மணிகண்டன், ஆகியோர் பங்கேற்று  பேரறிஞர் அண்ணா லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயணன் கொள்கைகளை பின்பற்றியதிலும்  முன்னாள் பிரமர்கள் ஐ.கே.குஜ்ரால் வாஜ்பாய் உள்ளிட்டவர்களுடன் இணைந்து இரா.செழியன்   நாடாளுமன்றத்தில் மக்களின் உரிமைக்காகவும் நாடாளுமன்ற நடைமுறைகளையும் அதன் சுதந்திரத்தையும் வலியுறுத்துவதிலும் காட்டிய அக்கறை பல்வேறு கட்சிகளுக்கு சட்ட திட்டங்களை வகுத்து கொடுத்ததிலும் ஆற்றிய பணிகளை பாராட்டி பேசினார்கள்.இவ்விழாவில் இரா.செழியனை பாராட்டி பேசிய நீதிபதிகள் பி.ஆர்.கோகுலகிருஷ்ணன், எஸ்.மோகன், ஞானப்பிரகாசம், கல்வியாளர்கள் முனைவர் வி.சண்முகசுந்தரம், முனைவர் கலாநிதி, தொழிலதிபர்கள் வி.ஜி.சந்தோஷம், ஜெம் கிரைனட் வீரமணி, உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில் விஐடி துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், முனைவர் சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம் மற்றும் இரா.செழியனின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்றனர். முடிவில்வழக்கறிஞர் அண்புமணி நன்றி கூறினார். விழாவில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்ளீர் செல்வம் பங்கேற்று இரா.செழியனுக்கு மாலை சால்வை அணிவித்து வாழ்த்தினார்.

அவருடன் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனிசாமி, மா.ப.பாண்டியராஜன், பொன்னையன், முன்னாள் எம்பி மைத்ரேயன் ஆகியோரும் செழியனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொது செயலாளர் வை.கோ, புதுச்சேரி முன்னாள் முதல்வர் ராமசாமி ஆகியோர் இரா. செழியனுக்கு வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்