முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலைவாழ்பகுதி குழந்தைகள் நன்றாக படித்தால் அரசின் முன்னுரிமை அடிப்படையில் அரசு உயர் பதவிகளில் அமரலாம்: அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு

சனிக்கிழமை, 29 ஏப்ரல் 2017      வேலூர்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் பீஞ்சமந்தை, பலாம்பட்டு மற்றும் ஐhர்தான் கொல்லை ஊராட்சி மலைகிராம பகுதிகளை சார்ந்தவர்களுக்கு பீஞ்சமந்தை அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் நடைப்பெற்ற விழாவில் 700 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு மலைவாழ் ஐhதிசான்றிதழ்களையும், 10 முதியோர்களுக்கு முதியோர் உதவிதொகைகளையும், 10 விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் விசைதெளிப்பான்களையும், 2 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரம் மற்றும் தேய்ப்பு பெட்டியையும், ஊரக வளர்ச்சி துறையின் மூலம்  பசுமை வீடுகள் 2 பயனாளிகளுக்கும், 4 பயனாளிகளுக்கு இந்திரா நினைவு குடியிருப்பு வீடுகளுக்கான நான்காம் கட்ட பணிநிறைவு காசோலையினையும் மகளிர் திட்டம் மூலம் 59 மகளிர்  சுயஉதவிகுழுக்களுக்கு 73 இலட்சம் மதிப்பிலான வங்கிகடனுதவிகளையும் மொத்தம் 787 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை  வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் கலெக்டர் சி.அ.ராமன்,   தலைமை தாங்கினார்.

ஊக்குவிப்பு

இந்நிகழ்ச்சியில்  வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:-மறைந்த  தமிழக முதல்வர் அம்மா ஆசியுடன் செயல்படும் தமிழக அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், பெற்றோர்களின் சுமையை குறைத்திடும் வகையில் தமிழகத்தில் உள்ள ஏழை எளிய குழந்தைகள் கல்வியில் தலைசிறந்து விளங்கவும் இலவச கல்வியையும் தமிழகத்தில் வழங்கி குழந்தைகளுக்கு கல்வி நாட்டத்தை ஏற்படுத்தியவர் மறைந்த  தமிழக முதல்வர் அம்மா அவர்கள் வழங்கியுள்ளார்கள். உயர் பதவிகளில் முதல் முன்னுரிமை மலைவாழ் மக்களுக்குத்தான் இந்த வாய்ப்பை மிக குறைந்த அளவே இந்த வகுப்பை சார்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆகையால் நமது மாவட்டத்தில் உள்ள மலைவாழ் மக்களின் குழந்தைகள் கல்வியின் நன்மையை உணர்ந்து நன்றாக கல்வியில் நாட்டத்தை ஏற்படுத்தி கொண்டு நன்றாக படித்தால் முன்னுரிமை அடிப்படையில் அரசு உயர் பதவிகளில் இடம்பெற்று சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடையலாம். இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ள தாய்மார்கள் இதனை உணர்ந்து தங்களுடைய குழந்தைகளை ஒரு குறிக்கோளோடு எதிர்காலத்தை அமைத்துகொள்ள வழிகாட்ட வேண்டும்.

பீஞ்சமந்தை, பலாம்பட்டு மற்றும் ஐhர்தான் கொல்லை ஊராட்சி மலைகிராம பகுதிகளை சார்ந்த மக்கள்  3 கோரிக்கைகளை வைத்துள்ளீர்கள். ஆரம்ப சுகாதார நிலையத்தில் சில குறைபாடுகள் உள்ளது என்று கோரிக்கை வைத்துள்ளீர்கள் அவற்றை உடனடியாக முறைபடுத்த அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சனையும் தெரியபடுத்தி உள்ளீர்கள் இவற்றை போர்கால அடிப்படையில் தீர்க்க ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கு அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளது. மூன்றாவதாக மலை பகுதகளில் சாலை வசதியினை செய்ய வேண்டும். மலை பகுதிகளில் சாலைவசதிகள் அமைப்பதற்கு உடனடியாக எவ்வளவு நிதிவேண்டுமானலும் தமிழக அரசிடமிருந்து பெற்றுத்தர முடியும். ஆனால் வனபகுதிகளில் சாலை வசதிகள் அமைக்க இந்திய வனத்துறையிடம் இருந்து அனுமதி பெறுவதில்தான் பல்வேறு சட்டசிக்கல் நிலவுகிறது இதனால்தான் இத்தனை ஆண்டுகள் ஆனாலும் சாலைகள் போடுவதில் தாமதம் ஏற்படுகிறது. தற்போது பல்வேறு தொடர் நடவடிக்கையின் காரணமாக இந்த பீஞ்சமந்தை மலைகிராம வனச்சாலை இந்த வருட இறுதிக்குள் தார்சாலையாக மாற்ற விரைவில் ஆணை கிடைக்கும் தருவாயில் உள்ளது என்பதை இப்பகுதி மக்களுக்கு நான் தெரிவிக்கிறேன். இன்று சாதிசான்றிதழ்கள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் பெறும் பயனாளிகள் நலத்திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டுமென்று  வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி அவர்கள் பேசினார்.இந்நிகழ்ச்சியில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.தா.செங்கோட்டையன், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை பெரியசாமி, வருவாய் கோட்டாட்சியர் அஐய்சீனிவாசன். ஆவின் தலைவர் த.வேலழகன், அணைக்கட்டு வட்டாட்சியர் உஷாராணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்பழகன், நளன்கில்லி, அமிர்தி வனசரகர் முருகேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.இளங்கோ, மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்