முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சனிக்கிழமை, 29 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

மணிலா - பிலிப்பைன்ஸ் நாட்டில் 6.8 ரிக்டர் அளவுக்கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கம்
சரான்கானி மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் 57 கிலோ மீட்டர் தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  6.8 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்தான தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை. மிண்டானோ பிராந்தியத்தில் பூமிக்கு அடியில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. அமெரிக்காவின் வானிலை ஆய்வு மையம் சுனாமி அலைகள் எழுவதற்கு வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை விடுத்து உள்ளது. ஆனால் பிலிப்பைன்ஸ் நாட்டின் எரிமலை மற்றும் நிலநடுக்கவியல் ஆய்வகம் சுனாமி எச்சரிக்கை எதுவும் கிடையாது என கூறிஉள்ளது.

வலுவான நிலநடுக்கம்
நிலநடுக்கம் குறித்து சாரன்கானி கடற்கரை பகுதியில் இருக்கும் ஜெனிபர் பேசுகையில், “நிலநடுக்கம் மிகவும் வலுவாக உணரப்பட்டது, சுமார் 10 நொடிகள் நிலநடுக்கமானது உணரப்பட்டது,” என்னுடைய அனுபவத்தில் இது மிகவும் வலுவான நிலநடுக்கம் ஆகும், சுவர்கள் எல்லாம் விழுவது போன்று காணப்பட்டது, என கூறிஉள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்