முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஞ்சிபுரம் மாவட்ட பொதுப்பணித்துறை மூலம் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகள் கலெக்டர் பா,பொன்னையா ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 30 ஏப்ரல் 2017      காஞ்சிபுரம்
Image Unavailable

காஞ்சிபுரம் மாவட்டம். பொதுப்பணித்துறை (நீர் வள ஆதாரம்) மு்லம் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை கலெக்டர் பா,பொன்னையா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

குடிமராமத்து பணிகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2016ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்ததனால் தவறியதால் இதுவரை இல்லாத அளவுக்கு வறட்சி நிலவுகிறது, இந்த வறட்சியினை சமாளிக்கும் வரை தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, குடிநீர் பிரச்சினை தீர்க்கவும். நீர் ஆதார பணிகளை மேற்கொள்ளவும் தமிழ்நாடு அரசால் 2016டூ2017ம் ஆண்டிற்கு நீர் வள ஆதாரங்களை மேலாண்மை செய்யும் வகையில் பயனீட்டாளர்கள் உதவியுடன் ரு்,100 கோடி மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகளை  தமிழக முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தியுள்ளார்கள், அதனடிப்படையில் ரு்,100 கோடி மதிப்பீட்டில் 30 மாவட்டங்களில் 1519 பணிகள் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது,காஞ்சிபுரம் மாவட்டம். ரு்,9,0 இலட்சம் மதிப்பீட்டில் மண்ணிவாக்கம் ஏரியில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்,

49 பணிகள் 

கலெக்டர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள ரு்,476,5,0 இலட்சம் மதிப்பீட்டில் 49 பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது, இதில் பாலாறு  வடிநில கோட்டத்தின்கீழ் செயல்படும் படப்பை பாசனப்பிரிவின்கீழ் 3 பணிகள் ரு்,28,0 இலட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்திட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, தற்போது மண்ணிவாக்கம் ஏரியின் கரையே பலப்படுத்தும்பணி ரு்,9,0 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, கடந்த 2016ம் ஆண்டில் பெய்த கனமழையின் காரணமாக ஏரியின் கரையில் 40 மீட்டர் அகலத்திற்கு உடைப்பு ஏற்பட்டு மிகப்பொpய வெள்ளச்சேதம் ஏற்பட்டது, அந்த உடைப்பை சரி செய்வது மட்டுமின்றி மேலும் கரையை பலப்படுத்தும் பணி 1000 மீட்டர் நீளத்திற்கு தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது, 

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி

மேலும் மாவட்டத்தில் நீர் நிலை புறம்போக்குகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்பணி ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது, தற்போது ஆக்கிரமிப்புகளில் உள்ள குடியிருப்புகளை கணக்கெடுக்கும்பணி நடைபெற்றுவருகிறது, பொதுமக்கள் பாதிக்காத வகையில் அவர்களை குடியமர்த்த மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு மறுகுடியமர்த்த நடவடிக்கைகள் எடுத்தபின்பு ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்றும்பணி மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்,
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை,ஜெயக்குமார். உதவி செயற்பொறியாளர். பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) ஜெபராஜ. மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்