முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீலகிரி மாவட்டத்தில்இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாமினை மாவட்ட கலெக்டர் .சங்கர்.குழந்தைகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 30 ஏப்ரல் 2017      நீலகிரி
Image Unavailable

நீலகிரி மாவட்டம் உதகை அரசினர் தாவரவியல் பூங்கா நுழைவுவாயிலில் இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாமினை மாவட்ட கலெக்டர் முனைவர்.பொ.சங்கர்.குழந்தைகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

47976 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து

நீலகிரி மாவட்டம் உதகை அரசினர் தாவரவியல் பூங்கா நுழைவுவாயிலில் இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாமினை மாவட்ட கலெக்டர் முனைவர்.பொ.சங்கர்.  குழந்தைகளுக்கு வழங்கி தொடங்கி வைத்து பேசியதாவது நீலகிரி மாவட்டத்தில் கடந்த 02.04.2017 அன்று நடபெற்ற முதற்கட்ட போலியோ சொட்டுமருந்து முகாமில் 47,967 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

770 மையங்கள்

அதனைத் தொடர்ந்து இன்று நீலகிரி மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக போலியோ சொட்டு மருந்து முகாமிற்காக 770 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பிறந்த குழந்தைகள் முதல் 5 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படும் மொபைல் வாகனங்களும் போலியோ சொட்டு மருந்து வழங்க பயன்படுத்தப்படும். பேருந்து நிலையம், இரயில் நிலையம், மாhக்கெட் பகுதிகள், சோதனை சாவடிகள், 29 கோயில்கள், 52 கிறிஸ்துவ ஆலயங்கள், 6 மசூதிகள் மற்றும் அனைத்து முக்கிய சுற்றுலா தலங்களிலும் போலியோ சொட்டு மருந்து மையங்கள் செயல்படும், நகர்புற பகுதிகளில் 135 போலியோ சொட்டு மருந்து முகாம்களும், கிராம பகுதிகளில் 635 போலியோ சொட்டு மருந்து முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அளவில் 45,000 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். எனவே இன்று நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாமினை நமது மாவட்டத்தில் பிறந்த குழந்தைகள் முதல் 5 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் விடுபடாமல் போலியோ சொட்டு மருந்து கொடுத்து, போலியோ நோயினை முற்றிலும் ஒழிக்க அனைவரும் ஒத்துழைக்கும்படி மாவட்ட கலெக்டர்  தெரிவித்தார்.அதனைத் தொடர்ந்து உதகை பிரீக்ஸ் பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வினை மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர்   பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் து.கணேஷமூர்த்தி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago