முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துரித உணவகங்களில் தரமற்ற உணவா? புகார் தெரிவிக்க அதிகாரி வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 30 ஏப்ரல் 2017      ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் நகரப்பகுதியிலும், புறநகர் பகுதியிலும், கிராமங்களிலும், சாலை ஓரங்களில் துரித உணவகங்கள், சைவ, அசைவ உணவுகளை தயார் செய்து கொடுக்கின்றனர்.காலிபிளவர், காளான், கோழி, ஆடு, மீன், இதர இறைச்சி வகைகளை எண்ணெயில் பொரித்து, சில்லி என்ற பெயரில் விற்கின்றனர். தரமற்ற காய்கறி, இறைச்சி வகைகள், முதல் நாள் தயார் செய்த இறைச்சி, தரமற்ற மசாலா, எண்ணெய், செயற்கை வண்ணங்கள், அஜினோமோட்டோவை பயன்படுத்துகின்றனர். இவ்வகையான உணவு உண்பதால், வயிற்றுப்போக்கு, ஒவ்வாமை, தலைசுற்றல், வாந்தி, தொடர்ந்து உண்ணும்போது புற்றுநோய் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, சாலையோரம், துரித உணவகங்கள் நடத்துவோர், தரமான காய்கறி, கோழி, ஆடு, மீன், இதர இறைச்சியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்

சட்ட  நடவடிக்கை

பழைய எண்ணெய், உணவை பயன்படுத்தக்கூடாது. உணவில் ஈ மொய்க்க கூடாது. உணவு பரிமாறும்போது, பிளாஸ்டிக் பேப்பர், கப், செய்தி தாள்களை பயன்படுத்தக்கூடாது. உணவு பொருள், இறைச்சி போன்றவற்றை வாங்கியதற்கான ரசீதை, வைத்திருக்க வேண்டும். தரமின்றி, பழைய உணவுகளை பயன்படுத்தினால், தரமற்ற உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், உரிமையாளர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களும், சாலையோர, துரித உணவகங்களில் தரமாக உணவு தயாரிக்கப்படுகிறதா என அறிந்து உண்ண வேண்டும். தரமற்ற உணவாக இருந்தால், 0424 2223545 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இதை ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்