முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகை மாவட்டத்தில் 509 பெண்களுக்கு ரூ.2 கோடியே 63 லட்சத்து ஆயிரத்து 508 மதிப்பிலான திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கான தங்கம்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 30 ஏப்ரல் 2017      நாகப்பட்டினம்
Image Unavailable

 

நாகப்பட்டினம் இ.ஜி.எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி புதிய கலையரங்கத்தில் நடைபெற்ற விழாவில், சமூக நலத்துறை சார்பில் நாகப்பட்டினம், வேதாரண்யம், தலைஞாயிறு, கீழ்வேளுர், கீழையூர், திருமருகல் ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த 509 பெண்களுக்கு ரூ.2 கோடியே 63 லட்சத்து ஆயிரத்து 508 மதிப்பில் திருமாங்கல்யம் செய்வதற்கான தங்கம் மற்றும் திருமண நிதியுதவி;யை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்.

தாலிக்கு தங்கம்

பெண்களுக்கு திருமாங்கல்யம் செய்வதற்கான தங்கம் மற்றும் திருமண நிதியுதவியினை வழங்கி கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் தெரிவித்ததாவது,நாகப்பட்டினம் மாவட்டத்தில் இதுவரை தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவி தொகையாக ரூ.107 கோடியே 43 இலட்சத்து 32 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் 509 பயனாளி;களுக்கு ரூ.2 கோடியே 63 லட்சத்து ஆயிரத்து 508 மதிப்பில் திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது. இனி அடுத்து 8 கிராமுடன் கூடிய தாலிக்கு தங்கம் வழங்கப்படவுள்ளது.142 ஆண்டுகளில் இல்லாத வறட்சி தமிழகத்தில் தற்போது நிலவுகிறது. தமிழக அரசானது மக்களுக்கு குடிநீர் வழங்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு நல் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

சமூக நலத்துறையின் சார்பில் இரு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீ;ழ் இருவருக்கும் தலா ரூ.25,000 வீதம் அவர்தம் வங்கி கணக்கிலேயே வைப்பீட்டு தொகையாக செலுத்தப்படுகிறது. இத்தொகை 18 மாதங்களுக்குப் பின் தலா ரூ.40,000 மாக கிடைக்கிறது. பிறந்தபோதே அவர்களுக்கான வாழ்வாதாரத்தை பெருக்குகின்ற வகையில் தமிழக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் 12 ம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு திருமங்கல்யத்திற்கு தங்கத்துடன் ரூ.25,000-ம் பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு முடித்த பெண்களுக்கு திருமங்கல்யத்திற்கு தங்கத்துடன் ரூ.50000 ம் வழங்கப்பட்டு வந்தது.

புரட்சித் தலைவி அம்மா தேர்தல் அறிக்கையில் அறிவித்தது போல திருமங்கல்யத்திற்கு தங்கம் 4 கிராமிலிருந்து, 8 கிராமாக உயத்தி வழங்கப்படுகிறது. இத்திட்டம் பெண்கல்வியை ஊக்குவிக்கும் சமுதாய புரட்சிகரத் திட்டமாகும். இத்திட்டத்திற்காக ரூ.723 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இன்யை தினம் நாகப்பட்டினம், வேதாரண்யம், தலைஞாயிறு, கீழ்வேளுர், கீழையூர், தி;ருமருகல் ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த 509 பெண்களுக்கு ரூ.2 கோடியே 63 லட்சத்து ஆயிரத்து 508 மதிப்பில் திருமாங்கல்யம் செய்வதற்கான தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்தகைய நல்ல திட்டங்களை பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் உயர வேண்டும்" என தெரிவித்தார்..

இவ்விழாவில் நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கோபால், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் ஆர்.ஜெயமீனா, நகர கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.சந்திரமோகன், வெளிப்பாளையம் பால் கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கா.குணசேகரன், சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தலைவர் தங்ககதிரவன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்