முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2.41 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்: லெக்டர் பிரசாந்த் வடநேரே தொடங்கிவைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 30 ஏப்ரல் 2017      திருவண்ணாமலை
Image Unavailable

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2வது கட்டமாக தீவிர போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோய் தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாமினை குழந்தைகளுக்கு சொட்டு மருந்து ஊட்டி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே நேற்று தொடங்கிவைத்தார்.

சிறப்பு முகாம்

தமிழகத்தில் போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாதத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க ஒவ்வொரு ஆண்டும் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தமிழக அரசு சுகாதாரத்துறை மூலம் இலவசமாக போலியோ சொட்டு மருந்து 2 தவணையாக குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுவந்தது. இந்நிலையில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஏப்ரல் 2ந் தேதி முதல் தவணையும், 30ந் தேதி 2வது தவணையும் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 5வயதுக்குட்பட்ட 2 லட்சத்து 41 ஆயிரத்து 229 குழந்தைகளுக்கு முதல்தவணையாக கடந்த 2ந் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இரண்டாவது தவணையாக போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. திருவண்ணாமலை வேங்கிக்காலில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் முகாமினை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே குழந்தைகளுக்கு சொட்டு மருந்து ஊட்டி தொடங்கிவைத்தார்.

இதேபோல செய்யாறு நகராட்சி வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமினை செய்யாறு சுகாதார மாவட்ட சுகாதார பணி துணை இயக்குநர் கோவிந்தன் தொடங்கிவைத்தார்.மாவட்டம் முழுவதும் 1971 முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் 7884 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி பேருந்துநிலையம், ரயில்வே நிலையம், கோயில்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

இந்த முகாமில் நலப்பணிகள் இணை இயக்குநர் கிரிஜா, சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் மீரா, கூடுதல் இயக்குநர் சுரேஷ்குமார், இணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் ஜே.சுந்தர்ராஜ், வட்டார மருத்துவ அலுவலர் எஸ்.புவனேஸ்வரி, மருத்துவ அலுவலர்கள் டாக்டர் அறிவழகன், டாக்டர் பொன்.பார்த்திபன், அடிஅண்ணாமலை ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் காயத்ரி, மாநில தாய் சேசய் நல அலுவலர் ஜெயஸ்ரீ, மாவட்ட தாய்சேய் நல அலுவலர் ராஜேஸ்வரி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆர்.ராஜேந்திரகுமார், மற்றும் பகுதி சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலரியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்