முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேன்கனிகோட்டையில் ரூ. 12 லட்சம் மதிப்பில் நாட்டு பசுமாட்டுப் பால் குளிரூட்டும் நிலையம்: அமைச்சர் பா.பாலகிருஷ்ணாரெட்டி திறந்து வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 30 ஏப்ரல் 2017      கிருஷ்ணகிரி
Image Unavailable

 

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருள் மிகு பேட்ராயசுவாமி அருகில் உள்ள சமுதாய கூடத்தில் ரூ. 12 லட்சம் மதிப்பிலான நாட்டின பசும் பால் குளிரூட்டும் நிலையத்தை கால்நடை பாராமரிப்புத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி அவர்கள் நேற்று (30.04.2017) திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் சி.கதிரவன் தலைமை வகித்தார். புதுவாழ்வு திட்ட மேலாளர் க.மூர்த்தி அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.

 

கடனுதவிகள்

பின்பு மகளிர் கூட்டமைப்புகளுக்கும், சுய உதவிக்குழுக்கும் கடனுதவிகளை வழங்கி பேசியபொழுது:தமிழக மறைந்த முதல்வர் அம்மா அவர்களின் மனதில் உதித்த உன்னத திட்டமே ‘புதுவாழ்வு திட்டம்" ஆகும். இத் திட்டம் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டிற்கு சிறப்பு கவனம் அளித்து வறுமையில்லா மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவதே நோக்கமாகும். இத்திட்டம் மூலம் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள, இதுவரை குழுக்களில் இணையாத தகுதி வாய்ந்த மக்களை சுய உதவிகுழுக்களாக இணைத்து வங்கி கடனுதவி பெற்று தருதல். மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளோர், மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு திட்டம் மூலம் நேரடி கடனுதவி அளித்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல். கிராமப்பகுதிகளில் சிறுதொழில்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி நிதி உதவி அளித்தல். கிராம புற இளைஞர்கள் எளிதில் வேலைவாய்ப்பு பெற்றிட ஓட்டுனர் பயிற்சி, துஊடீ பயிற்சி, பொக்லின் பயிற்சி, செவிலியர் பயிற்சி, கணினி பயிற்சிகள், போன்ற தொழிற்பயிற்சிகள் அளித்து வேலைவாய்ப்பினை பெற்றுத்தருதல் ஆகியவை முக்கிய பணிகளை செய்து வருகிறது.

மாநிலத்திலேயே நமது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தான் நாட்டி இன பசும் பால் குளிரூட்டும் நிலையம் அமைக்கப்பபட்டுள்ளது. மலை வாழ் பகுதிகளில் ஏழை எளிய மக்கள் அதிக அளவில் நாட்டின பசுக்களை வளர்த்து வருகிறார்கள். இவர்களின் பொருளாதார நிலையை உயர்த்தும் வகையில் தளி கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியங்களில் வாழும் மக்களின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வகையில் நாட்டுபசும் பால் சேகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு அங்கே கொள்முதல் செய்யும் பால் ஒரு லிட்டருக்கு ரூ.40 முதல் ரூ.45 வரை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

நாட்டு மாட்டுப் பாலை யு2 என்றும் மற்ற கலப்பின மாடுகளின் பாலினை யு1 எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் யு1 ரகத்தில் உள்ள கொழுப்பு முழுமையாக ஜீரணிக்க இயாலாதது. நமது நாட்டு மாட்டுப்பால் ஜீரனிக்க எளிதானது எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டு மாட்டுப் பால், குழந்தைகளுக்கும், முதியோருக்கும் ஏற்றது என்பதும் கலப்பின மாடுகளின் பால் இவர்களுக்கு ஏற்றது அல்ல. இதனை கருத்தில் கொண்டு கலெக்டர் அவர்களின் சீறிய முயற்சியால் தேன்கனிக்கோட்டை வட்டம், தேன்கனிக்கோட்டையில் உள்ள சமுதாய கூடத்தில் நாட்டு மாட்டுப் பால் சேகரிப்பு மற்றும் குளிரூட்டும் நிலையம் ஒன்று ரூ.12.00 இலட்சத்தில் துவக்கப்படுகிறது. இதன் மூலம் ஏற்கனவே லிட்டர் ஒன்றிற்கு ரூ.20 முதல் ரூ.25 வரை பெற்று வந்த நிலைமாறி இரண்டு மடங்கு வருமானம் பெருக்குவதற்கான வாய்ப்பு உருவாக்கித்தரப்பட்டுள்ளது.

மேலும் இன்று மட்டும் 145 மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள 890 மகளிர் பயன் பெறும் வகையில் ரூ.2.56 கோடி வங்கி மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் மூலம் கடனுதவிகள் வழங்கப்படுகிறது. எனவே, புதுவாழ்வு திட்டத்தின் மூலம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ள இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி தாங்கள் அதிக அளவில் நாட்டின பசு மாடுகளை வளர்க்க வேண்டும். அதன் மூலம் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட வேண்டும். இரண்டு மடங்காக கிடைக்கு இந்த வருவயை பெற்று வறுமையை போக்கி வளமுடன் வாழ வேண்டும் . மேலும் உங்கள் குழந்தைகளை பள்ளியில் அனுப்பி படிக்க வைக்க வேண்டும். இளம் வயது திருமணம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். என கால்நடை பாராமரிப்புத் துறை பா.பாலகிருஷ்ணா ரெட்டி அவர்கள் உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் மரு.எம்.பி.சரவணன், வட்டாட்சியர் ஜெ.ராமகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்; சரவணபவா, தேவராஜன், புதுவாழ்வு திட்ட கள பகுதி அலுவலர் என்.கருப்பணன், உதவி திட்ட மேலாளர் சுதாகர், சிவலிங்கம், அருண்குமார், மீனாட்சி சுந்தரம் உள்ளிடோர் கலந்துக்கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்