முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சியை சமாளிக்கும் வகையில் ரூ.12.77 கோடியில் குடிநீர் திட்ட பணிகள் - கலெக்டர் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 30 ஏப்ரல் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,-ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட  ஊரக பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கூடுதல் குடிநீர்; ஆதாரங்கள்  ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும்; பல்வேறு குடிநீர் திட்டப்பணிகளை செய்தியாளர்களுடன் நேரடியாகச் சென்று மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
     அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் எதிர்பார்த்த அளவு வடகிழக்கு பருவமழை பெய்யாத காரணத்தினால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது.  இத்தகைய சூழ்நிலையில்  ஊரக பகுதிகளில் பொதுமக்களின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்திட ஏதுவாக கூடுதல் குடிநீர் ஆதாரங்கள் ஏற்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  அதனடிப்படையில் 941 பணிகளுக்காக ரூ.12.77 கோடி மதிப்பிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  அவற்றில் 893 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு அதில் 442 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
 குறிப்பாக, காவேரி குடிநீர் திட்டங்களிலிருந்து கிடைக்க வேண்டிய குடிநீர் ஆதார அளவு பாதிக்கும் கீழ் குறைந்துவிட்டபடியால் அதன்மூலம் பயனடைந்த கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என்பதை உணர்ந்து அக்கிராமங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், ஆர்.எஸ்.மடை, எல்.கருங்குளம் ஆகிய இடங்களில் குடிநீர் முற்றிலும் தடைபட்டிருந்ததால் மாற்று ஏற்பாடாக தலா ரூ.6.50 லட்சம் மதிப்பில் புதிய திறந்தவெளி கிணறுகள் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு அப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளது என்றார்.
 மாற்று ஏற்பாடாக அமைக்கப்பட்டு வரும் திறந்தவெளி கிணறுகளில் தற்போது  9 அடி அளவிற்கு நல்ல குடிநீர் நிரம்பியிருந்ததை மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் செய்தியாளர்களுடன் பார்வையிட்டார். இதுதவிர, மாவட்ட கலெக்டர் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பேராவூர், சூரங்கோட்டை ஆகிய ஊராட்சிகளில் உள்ள ஊரணிகளில்; தலா ரூ.6.50 லட்சம் மதிப்பில்  திறந்தவெளி கிணறுகள் அமைக்கும் பணிகளையும், போகலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செய்யாலூர் கிராமத்தில் ரூ.50 ஆயிரம் மதிப்பில் உறைகிணறு அமைக்கும் பணிகளையும், தீயனூர் கிராமத்தில் உள்ள கண்மாய் மற்றும் ஊரணியில் தலா ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் ரூ.4 லட்சம் மதிப்பில் புதிதாக மேற்கொள்ளப்பட்டு வரும் கை விசைப்பம்பு அமைக்கும் பணிகளையும் செய்தியாளர்களுடன் சென்று பார்வையிட்டார்;. 
 இந்த செய்தியாளர் பயணத்தின் போது செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை,மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) உமா மகேஸ்வரி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஆ.செல்லத்துரை உள்பட சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago