முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஸ் ஸ்டாண்டில் அனுமதியின்றி செயல்பட்ட ஓட்டலுக்கு ‘சீல்

ஞாயிற்றுக்கிழமை, 30 ஏப்ரல் 2017      ஈரோடு

ஈரோடு மாநகராட்சிக்கு சொந்தமான பஸ் ஸ்டாண்டில் உள்ள வணிக வளாகத்தில் முதல் தளத்தில் கடந்த ஓராண்டாக ஓட்டல் ஒன்று அனுமதி பெறாமல் இயங்கி வந்துள்ளது. தற்போது சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியின்றி செயல்படும் ஓட்டல்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி  ஈரோடு மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் விஜயா தலைமையில் பில் கலெக்டர்கள் இளங்கோவன், கதிர்வேல், பரமேஸ்வரன், சுரேஷ் மற்றும் அதிகாரிகள் குழுவினர் மாநகராட்சி பஸ் ஸ்டாண்டில் இயங்கி வந்த இந்த பிரியாணி ஓட்டலுக்கு சீல் வைத்தனர். 

90 சதவீதம் வரிவசூல் செய்யப்பட்டுள்ளது

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில் மாநகராட்சி வரி செலுத்தாத நிறுவனங்கள் கண்டறியப்பட்டு வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இதுவரை 90 சதவீதம் வரிவசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அனுமதி இல்லாமல் மாநகராட்சி வணிக வளாகங்களில் செயல்பட்டு வரும் கடைகள், ஓட்டல்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தற்போது சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி அனுமதியின்றி செயல்பட்டு வந்த இந்த ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago