முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தல 502 வது திருவிழா திருத்தேர் பவனி

திங்கட்கிழமை, 1 மே 2017      திருவள்ளூர்
Image Unavailable

 பொன்னேரி அடுத்த பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தல திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது அதன் நிகழ்வான திருத்தேர் பவனி இருநாட்கள் நடைப்பெற்றது.

9 நாட்கள்

 புகழ்பெற்ற பழவேற்காடு புனித மகிமைமாதா திருத்தலத்தில் ஆண்டுதோறும் ஈஸ்டர் முடிந்து இரண்டாம் வாரத்தில் ஆடம்பரத் தேர்த்திருவிழா கோலாகலமாக நடைப்பெற்று வருகிறது. ஈஸ்டர் பெருவிழா முடிந்ததும் வியாழக்கிழமை அன்னையின் விழாக்கொடி ஏற்றப்படும்.

9 நாட்கள் நவநாட்கள் சிறப்பிக்கப்பட்டு 2 ஆம் சனிக்கிழமையான நேற்று முன்தினம் தேர்பவனி நடைப்பெற்று ,ஞாயிறு ஆடம்பரத் திருப்பலியொடு முடிவடைந்தது.மேலும் ஞாயிறன்று பிற்பகல் 2 மணி முதல் சாதி,மத இன வேறுபாடின்றி திருத்தலத்தை அலையென நாடிவந்து காணிக்கைகளை செலுத்தி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.502 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருத்தலத்தில் திருவிழாவையொட்டி திருத்தல அதிபர் ஆல்வின் தலைமையில் நற்கருணை ஆசிவாதமும்,சிறப்பு மறையுரையும் நடைப்பெற்றது.

20 ஆண்டுகளுக்கு பிறகு அன்னை மகிமை மாதாவின் திருவுருவம் ஆலயத்தின் முதல் தளத்தில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. முன்னதாக ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட அன்னையின் திருத்தேரானது பக்தர்களின் பரவசம் பொங்க பழவேற்காடு பகுதிகளின் முக்கிய வீதிகளில் உலா வந்தது.இதில் ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்துக்கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்