முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நில அளவை துறையில் ஆய்வாளர் தலைமையில் புதிய மறு அளவை திட்ட அலகுகள் வேண்டும் மாநாட்டில் தீர்மானம்

திங்கட்கிழமை, 1 மே 2017      திருநெல்வேலி
Image Unavailable

 

நிலஅளவை துறையில் ஆய்வாளர் தலைமையில் புதிய மறு அளவை திட்ட அலகுகள் வேண்டும் போன்ற கோரிக்கைகள் நெல்லையில் நடைபெற்ற தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு 2வது மாவட்ட மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன 

மாநாடு 

 நெல்லையில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கத்தின் 2வது மாவட்ட மாநாடு நடைபெற்றது ,மாநாட்டிற்கு சங்க மாவட்ட தலைவர் பேசியப்பன் தலைமை தாங்கினார் ,மாவட்ட இணை செயலாளர் மணிபாலன் வரவேற்று பேசினார் , சங்க மாநில செயலாளர் ஸ்டான்லி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்

நிர்வாகிகள் பேச்சு

 தொடர்ந்து மாநாட்டு மலர் வெளியிட பட்டது , தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் சங்கமும் நமது கடமையும் என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார் , மாநாட்டில் மாநில பொருளாளர் ராஜா ,மாநில செயலாளர் ரவி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் என்.குமாரவேல்,அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பார்த்தசாரதி, மாவட்ட செயலாளர் துரைசிங் , தமிழ்நாடு ஓய்வுபெற்ற நிலஅளவை அலுவலர் ஒன்றிப்பு மாநில துணை தலைவர் சண்முகையா ,குமாரி மாவட்ட முன்னாள் மாவட்ட செயலாளர் பேராச்சி ஆகியோர் வாழ்த்தி பேசினர் ,நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் மாவட்ட செயலாளர் மாரியப்பன் வேலை அறிக்கைகளை சமர்ப்பித்து பேசினார் ,மாவட்ட பொருளாளர் பீர்பாத்திமா பொருளாளர் அறிக்கைகளை சமர்ப்பித்து பேசினார்

தீர்மானங்கள்

மாநாட்டில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் , புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஒய்வு திட்டத்தையே தொடர வேண்டும் 7 வது ஊதிய குழுவில் ஊதிய மாற்றம் செய்து தர வேண்டும், குறுவட்ட அளவளர் துணை ஆய்வாளர் ஆகியோருக்கு குடியிருப்பு வேண்டும்,தொழில் நுட்ப துறையாக அங்கீகரிக்க வேண்டும்,களப்பணியாளர்களுக்கு 2 புல உதவியாளர் வேண்டும், நாட்குறிப்பை எளிமையாக்க வேண்டும்,நிலஅளவை துறையில் ஆய்வாளர் தலைமையில் புதிய மறு அளவை திட்ட அலகுகள் வேண்டும் ,அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நில அளவை துறைக்கான பணியாளர் தேர்வு தற்போது குரூப் 4 பொது தேர்வாக உள்ளது இதனை நில அளவளர் பணிக்கான சிறப்புதாளுடன் கூடிய தனி தேர்வு நடத்திட வேண்டும் போன்ற தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. சங்க மாநில துணை தலைவர் ப.குமாரவேல் நிறைவுரையாற்றினார் ,சிவசைலநாதன் நன்றி கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்