முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொண்டர்களை சந்திக்க 5-ம் தேதி முதல் ஒ.பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம்

திங்கட்கிழமை, 1 மே 2017      அரசியல்
Image Unavailable

சென்னை  - தொண்டர்களை சந்திப்பதற்காக 5-ம் தேதி முதல் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தனது சுற்றுப்பயணத்தை துவக்க உள்ளார்.

முட்டுக்கட்டை
அ தி.மு.க. இரு அணிகள் இணைப்பு முயற்சிக்கான பேச்சுவார்த்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. ஒ.பன்னீர்செல்வம் அணியினர் தாங்கள் விதித்த 2 நிபந்தனைகளை நிறைவேற்றினால்தான் பேச்சு வார்த்தை என்று உறுதியாக கூறிவிட்டனர். இரு அணியினரும் மாறுபட்ட கருத்துக்களை கூறி வருவதால் பேச்சுவார்த்தைக்கு இணக்கமான சூழல் உருவாகவில்லை.

முதல்வர் பேச்சு
முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பேசும்போது, 90 சதவீத நிர்வாகிகள் தம்மிடம் இருப்பதாகவும், அதனால் கட்சியையும், ஆட்சியையும் அசைக்க முடியாது என்று பேசினார். இதனால் ஒ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செம்மலை தலைமையில் சேலம் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் இரு அணிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து இணைப்புக்கான பேச்சு வார்த்தை நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்
இந்த சூழ்நிலையில் ஒ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். 32 மாவட்டங்களுக்கும் சென்று தொண்டர்களை சந்திக்கிறார். 5-ம் தேதி சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். இந்த மாதம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்கிறார். மாவட்டம் வாரியாக ஊழியர்கள் கூட்டத்தை நடத்தி அணிக்கு மேலும் வலு சேர்க்கிறார். 5-ம் தேதி காஞ்சீபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்கும் அவர் 11-ம் தேதி தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டம், 12-ம் தேதி சேலம், நாமக்கல் மாவட்டங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்லும் ஒ.பன்னீர்செல்வம் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், உள்ளிட்ட பகுதி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர் களை சந்தித்து பேசுகிறார்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் சென்னையில் பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்குள்ளாக இந்த சுற்றுப் பயணம் மூலமாக தொண்டர்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். மேலும் அனைத்து மாவட்டங்களுக்கும் புதிய நிர்வாகிகளை நியமிக்கவும், ஒ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மாவட்ட நிர்வாகிகள், பிற அணி நிர்வாகிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. சுற்றுப்பயணத்தை தொடங்குவதற்கு முன்னதாக புதிய நிர்வாகிகள் பட்டியலை அவர் அறிவிக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago