முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவமால்காப்பேர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

திங்கட்கிழமை, 1 மே 2017      விழுப்புரம்
Image Unavailable

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம் நவமால்காப்பேர் ஊராட்சியில், மே தினத்தை முன்னிட்டு, கிராம சபை கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

 

பணிகள் குறித்து விவாதம்

வடகிழக்குப் பருவமழை பொய்த்ததால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து உள்ளதால் விநியோகம் செய்யப்படும் குடிநீரின் அளவு குறைந்துள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் குடிநீரை சிக்கனமாக இத்தருணத்தில் உபயோகப்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுத்தல், திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற ஊராட்சியாக இந்த ஊராட்சியை உருவாக்கவும், தனிநபர் இல்லக் கழிப்பறைகளை தொடர்ந்து பயன்படுத்த உறுதி ஏற்றுக்கொள்ளுதல், வன உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் வன உரிமைச் சட்டத்தின்கீழ், வனங்களில் வசிக்கும் பழங்குடியினர் மற்றும் இதர பிரிவினரின் உரிமைகள் குறித்து விளக்குதல், நில மேம்பாட்டு நடவடிக்கைகள், பராம்பரிய நீர் ஆதாரங்கள் மற்றும் ஏரிகளை தூர் வாருதல், வெள்ளக் கட்டுபாட்டுப் பணிகள், ஊரக இணைப்புப் பணிகள், விவசாயம் சார்ந்த பணிகள், கால்நடை, மீன்பிடிப்பு தொடர்புடைய பணிகள், கடலோர பகுதியில் பணிகள், கிராமப்புர குடிநீர் பணிகள், கிராமப்புற சுகாதாரம் தொடர்புடைய பணிகள் ஆகியவை குறித்து இக்கிராம சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.கிராம சபைக் கூட்டத்தில், கலெக்டர் இல.சுப்பிரமணியன் பேசியதாவது

வளர்ச்சிப் பணிகள்

 ஒவ்வொரு ஆண்டும் மே தினமான தொழிலாளர் தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் ஊரகப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இவ்விவாதத்தின் முக்கிய குறிக்கோளாக, இன்று குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு 12(1)(சி)-ன்படி முன்பவரு கல்வி நிலையில், கல்வி வழங்கும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முன்பருவ கல்வி நிலையிலேயே நடைபெற வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறது. 

அரசே செலுத்தும்

 இப்பிரிவின்படி, உதவி பெறாத தனியார் பள்ளிகளில் தொடக்க நிலை வகுப்புகளில் (ஒன்றாம் வகுப்பு அல்லது டுமுபு) சேர்க்கை பதிவில் 25 விழுக்காடு இடங்களை பள்ளிகளின் அருகாமையில் வசிக்கும் நலிந்த பிரிவினர் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றும், அவ்வாறு 25 விழுக்காடு இடங்களில் சேர்த்துக் கொள்ளப்படும் மாணவ மாணவியர்களுக்கு கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும் .

விண்ணப்பிக்கலாம்

நலிவடைந்த பிரிவினர் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு குறைவாகவும், வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர்களான தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினராகவும், வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவினர்களான ஆதரவற்ற குழந்தைகள், மூன்றாம் பாலின குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகள், துப்புரவு தொழிலாளர் குழந்தைகள், எதிர்பாற்றல் குறைந்த குழந்தைகள், வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் என இவ்வாறு நலிவுற்ற பெற்றோர்களின் குழந்தைகளுக்கு இணைய தளம் மூலமாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

நடவடிக்கை

மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் பணியாற்றும் பணியாளர்களுக்கு நாளொன்றிற்கு ரூ.205- ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்றும் பணிபுரியும் நேரத்தை கணக்கிட்டு, அதற்கேற்றார்போல் ஊதியம் வழங்கவும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க தற்பொழுது அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதால், பணி முடித்த 10 நாட்களுக்குள் அவர்களுக்கு ஊதியம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என கலெக்டர் இல.சுப்பிரமணியன் தெரிவித்தார்கள்.

பலர் பங்கேற்பு

 

இக்கிராம சபை கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மகேந்திரன், உதவி இயக்குநர் ஊராட்சிகள் சீனுவாசன், விழுப்புரம் வட்டாட்சியர் பத்மா, வட்டாட்சியர் (சமூகபாதுகாப்புத்திட்டம்) வேல்முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜோதி, ஜகதீசன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago