முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா, சீனா -ரஷ்யாவின் பங்களிப்பு இல்லை : அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 1 மே 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் ஒருதலைபட்சமாக உள்ளது, அமெரிக்கா ஏகப்பட்ட பில்லியன் டாலர்கள் தொகையை செலவழிக்கிறது ஆனால் இந்தியா, சீனா, ரஷ்யா பங்களிப்பு ஒன்றுமேயில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்  குற்றம் சாட்டியுள்ளார். பாரீஸ் ஒப்பந்தத்தில் இருப்பதா விலகுவதா என்ற முடிவை அமெரிக்கா இன்னும் 2 வாரங்களில் முடிவெடுக்கவுள்ளது. அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போதே ட்ரம்ப் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார், இது குறித்து அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்து இன்று வரை நீடித்து வருகிறது.

2 வாரங்களில் மிகப்பெரிய முடிவு
இந்நிலையில் அதிபர் பதவியேற்று 100 நாட்கள் முடிந்த நிலையை கொண்டாடும் விதமாக பென்சில்வேனியாவில் கூட்டம் ஒன்றில் டிரம்ப் பேசியபோது, “எங்கள் நாட்டு அரசு பன்னாட்டு ஒப்பந்தங்களில் அவசரம் அவசரமாக இணைகிறது, ஆனால் இந்த ஒப்பந்தங்களோ, பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் உட்பட, ஒருதலைபட்சமாக அமெரிக்காவுக்கு அதிக செலவினங்களை இழுத்து விடுகிறது, ஆனால் இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் பங்களிப்பைப் பார்த்தால் ஒன்றுமேயில்லை. இந்நாடுகள் எதிர்காலத்திலும் எதுவும் பங்களிப்பு செய்யப்போவதில்லை.

பார்த்து விடுவோம்
பாரீஸ் ஒப்பந்தம் குறித்து நான் 2 வாரங்களில் மிகப்பெரிய முடிவை எடுக்கப் போகிறேன். என்ன நடக்கிறது என்று பார்த்து விடுவோம்” என்று சவால் விடுத்தார். குறிப்பாக பாரீஸ் ஒப்பந்தத்தை ஆதரித்து அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஆயிரக்கணக்கானோர் ஊர்வலம் மேற்கொண்ட சில மணிநேரங்களில் பாரீஸ் ஒப்பந்தம் குறித்து டிரம்ப் இவ்வாறு பேசியுள்ளார். ஏற்கெனவே பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தை கெடுக்குமாறு பல்வேறு செயல்திட்டங்களை டிரம்ப் எடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. கரியமிலவாயு வெளியீட்டை இந்தியா குறைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதால் அமெரிக்காவின் புதுப்பிக்கக் கூடிய எரிசக்தி உற்பத்தி நிறுவனங்களுக்கு இந்தியா பெரிய சந்தையாக மாறும் என்று ஜனநாயகக் கட்சியினர் தெரிவித்தனர்.

டிரம்ப் வாசித்த பாம்பு கவிதை:
பென்சில்வேனியா கூட்டத்தில் பேசிய அதிபர் டிரம்ப் இறந்து கொண்டிருக்கும் பாம்பு ஒன்றை வளர்க்கும் பெண் பற்றிய கவிதை ஒன்றை வாசித்தார், பாம்பை வளர்க்கும் அந்தப் பெண்ணையே பாம்பு கடித்து விடுகிறது என்ற கதைக்கருவில் அமைந்த கவிதையாகும் அது. இதை வாசித்து விட்டு தான் ஏன் அகதிகளை அனுமதிப்பதில்லை என்பதற்கு விளக்கம் தான் இந்தக் கவிதை என்றார்.  மேலும், “நான் சீனாவின் மிகப்பெரிய விமர்சகன். நீண்ட நாட்களாக சீனாவின் பணமதிப்பு முறைகேடு பற்றி பேசி வந்துள்ளேன். ஆனாலும் சீனா வடகொரியா எதிர்ப்பு விவகாரத்தில் நமக்கு உதவிகரமாக இருந்து வருகிறது. இது மிகப்பெரிய விஷயம்” என்று பாராட்டினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago