முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணகிரி ஒன்றியம், கார்வேபுரம் கிராமத்தில் கிரமசபா கூட்டம்: கலெக்டர் சி.கதிரவன் பங்கேற்றார்.

திங்கட்கிழமை, 1 மே 2017      கிருஷ்ணகிரி
Image Unavailable

 கிருஷ்ணகிரி ஒன்றியம் தேவசமுத்திரம் ஊராட்சி கார்வேபுரம் கிராமத்தில் நேற்று (01.05.2017) நடைபெற்ற கிரமசபா கூட்டத்தில் கலெக்டர் சி.கதிரவன் பங்கேற்றார்.

 செயல்பாடுகள்

 இக் கிராம சபா கூட்டத்தில் குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துல், கொசுகள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை, கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம், அந்தியோதயா இயக்கம், பொது நிதி செலவிம் குறித்து திட்ட அறிக்கை, சுகாதாரம், திறந்த வெளி மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகள், கழிப்பறை கட்டி பயன்படுத்து பயானளிகளுக்க பாராட்டு தெரிவித்தல், திறந்த வெளி மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகள், பள்ளி கழிப்பறைகள் மற்றும் அங்கன்வாடி மைய கழிப்பறை பயன்பாடு, திடக்கழிவு மேலாண்மை திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், புதுவாழ்வு திட்ட செயல் பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மீது விவாதம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

கூட்டத்தில் கலெக்டர் பேசும் பொழுது:ஆண்டு தோறும் மே 1- தேதியன்று தொழிலாளர் தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் அரசானையின் படி மாவட்டம் முழுவதும் உள்ள 333 ஊராட்சிகளிலும், இன்று நடைபெறுகிறது. அதனையொட்டி தேவசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட கார்வேபுரம் கிராமத்தில் இக் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. அவற்றில் குடிநீர் சிக்கனமாக பயன் படுத்துதல், தற்போது பருவ மழை வழக்கதை விட குறைவாக பெய்துள்ளதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. ஆகவே குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தக்கொள்ள வேண்டும். ஓகேனக்கல் குடிநீர் வாரத்திற்கு மூன்று, ஐந்து முறை வழங்கப்பட்டு வருகிறது. இந்நீரை சமைப்பதற்;கும் , குடிப்பதற்கும் பயன் படுத்திக்கொள்ள வேண்டும். நமது முன்னோர்கள் ஆறு, குளங்கள், ஏரிகள் வாய்க்கால்கள் உள்ளிட்டவற்றில் நீரை சேமித்து பயன்படுத்தி வந்தார்கள். வறட்சி காலத்தில் நாமும் தங்களுடைய கிராமம் மற்றும் வீடுகளில் பெய்யக்கூடிய மழை நீரை தங்களுடைய பகுதிலேயே சேமிக்க வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் காலங்களில் வீடுகளில் பயன்படுத்தப்படும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து சேமிக்கும் வகையில் புதிய தொழிற்நுட்பம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

டெங்கு கொசுக்கள் ஒழிக்க வீடுகளில் நீர் சேமிப்பு தொட்டிகள், குடிநீர் தொட்டிகள், கழிப்பறைகள் ஆகியவற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கழிப்பறைகள் இல்லாதவர்களுக்கு தமிழக அரசின்னுடைய ரூ. 12 ஆயிரம் நிதி மூலமாக கழிவறைகள் கட்டி கொடுக்கப்படும். மேலும் பிளாஸ்டிக் பயன்படுகளை; முற்றிலும் தவிர்க்க வேண்டும். கல்விக்கு முக்கியதுவம் கொடுக்கும் வகையில் வசதியற்ற நபர்களின் குழந்தைகளுக்கு முன்னரிமை அடிப்படையில் 25 விழுக்காடு தாங்கள் விரும்பும் தனியார் பள்ளிகளில் சேர்ந்து படிக்க அந்தந்த பகுதிகளில் உள்ள இ.சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்தார்.

இக் கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நரசிம்மன், உதவி இயக்குநர் ( ஊராட்சிகள்) லட்சுமணன், உதவி திட்ட அலுவலர் மலா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் பன்னீர் செல்வம், உதவி செயற்பொறியாளர் கே.சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஞானபிரகாசம், ராஜசேகர், ஒன்றிய பொறியாளர் தீபமணி, வட்டாட்சியர் மோகனசுந்தரம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.சேகர், உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திக் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்