முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அக்கமனஅள்ளி கிராம ஊராட்சியில் தொழிலாளர் தின சிறப்பு கிராம சபா கூட்டம்: கலெக்டர் கே.விவேகானந்தன் தலைமையில் நடந்தது

திங்கட்கிழமை, 1 மே 2017      தர்மபுரி
Image Unavailable

தருமபுரி மாவட்டம், தருமபுரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அக்கமனஅள்ளி கிராம ஊராட்சியில் நேற்று 01.05.2017 தொழிலாளர் தின சிறப்பு கிராம சபா கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.விவேகானந்தன், தலைமையில் நடைபெற்றது.

 கோரிக்கைகள்

 சிறப்பு கிராம சபா கூட்டத்தில் 20 பொருள்கள் தொடர்பாக விவாதிக்கபட்டது. மேலும் வறட்சி முன்னிட்டு குடிநீர் வழங்கல் தொடர்பாக கிராம சபாவில் கலந்துகொண்ட பொதுமக்களிடம் விவாதிக்கப்பட்டது மற்றும் தனிநபர் கழிப்பிடத்தின்அவசியம் கட்டுதல் தொடர்பாக பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிகைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. சீரான குடிநீர் விநியோகம் செய்யும் பொருட்டு மேல்நீர்தேக்கதொட்டி அருகாமையில் 10 பொது குடிநீர் குழாய்கள் அமைத்து குடிநீர் விநியோகம் செய்ய அறிவுரை வழங்கப்பட்டது. மேலும், அக்கமனஅள்ளி ஊராட்சியின் வரவு செலவு கணக்குகள் மற்றும் ஊராட்சியில் பராமரிக்கப்படும் சொத்துகள் பதிவேடு மற்றும் இதர பதிவேடுகளை கலெக்டர் கே.விவேகானந்தன், ஆய்வு செய்தார்.

இச்சிறப்பு கிராம சபா கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், எம். காளிதாசன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ)(பொ) ரா.ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்,

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago