முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாபநாசம் ஒன்றியத்தில் பசுபதிகோவிலில் மே தின சிறப்பு கிராம சபை கூட்டம் : அமைச்சர் துரைக்கண்ணு கலந்து கொண்டார்

திங்கட்கிழமை, 1 மே 2017      தஞ்சாவூர்
Image Unavailable

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், பசுபதிகோவில் மாதாகோவில் வளாகத்தில் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தலைமையில் நடைபெற்ற மே தின சிறப்பு கிராம சபை கூட்டத்தில் வோண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு நேற்று (01.05.2017) சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.  

வைப்புத்தொகை

 கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கிழ் தலா 25,000 ஆயிரம் வீதம் 10 நபர்களுக்கு ரூ.2.50 இலட்சத்திற்கான வைப்புத் தொகை ரசீதும், வேளாண் துறையின் சார்பில் ரூ.19,600 மானியத்தில் நுண்ணுயிர் பாசனத் திட்டத்தின் கீழ் 3 நபர்களுக்கு நீர் தெளிப்பான், தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 3 நபர்களுக்கு ரூ.500 மானியத்தில் பயிர் நுண்ணூட்ட சத்தும், தோட்டக்கலைத் துறை சார்பில் 4 நபர்களுக்கு தலா ரூ.3960 மானியத்தில் ஒட்டு மாங்கன்றுகளும் வழங்கி வோண்மைத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது,

பாபநாசம் ஒன்றியத்திற்குட்பட்ட 33 ஊராட்சிகளில் 2 பேரூராட்சிகள் தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக பசுபதிகோவில் கிராமம் விளங்குகிறது. அதற்கு காரணம், முன்பு சிறப்பாக பணியாற்றிய மக்கள் பிரதிநிதி ஆவார்கள். நாடாளுமன்ற மற்றும் என்னுடைய சட்ட மன்ற சிறப்பு நிதியிலிருந்து பெற்று சமுதாய கூடம், பொது மக்கள் பயன்படுகின்ற வகையில் அனைத்து திட்டங்களையும் பெற்று தந்துள்ளார்கள்.

உழைக்கும் மக்களை உணர்த்தும் உன்னத நாளான மே தின கொண்டாடப்படுகிறது. மே தினத்தில் மக்கள் தேவைகளையும், குறைகளையும், எண்ணத்தையும் கேட்பதற்காக மாவட்ட கலெக்டர் , உயர் அதிகாரிகள் ஆகியோர் கிராம சபை கூட்டத்தை கூட்டியுள்ளார்கள். 144 ஆண்டுகள் இல்லாத வறட்சி தற்பொழுது ஏற்பட்டுள்ளது. அம்மாவின் அரசின் முதலமைச்சர் குடிநீர் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள்.

எல்லா ஊராட்சிகளும் தூய்மையான ஊராட்சியாக மாறுவதற்கு முழு முயற்சி எடுக்க வேண்டும். திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத கிராமமாக மாற வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் அரசு வழங்கும் மானியத் தொகை பெற்று தனி நபர் கழிப்பறை கட்டி முழுமையாக பயன்படுத்த வேண்டும். குடிநீர் மஞ்சள் நிறத்தில் வருவதை கிராம சபை கூட்டத்தில் குறையாக கூறியுள்ளார்கள். அதற்காக எனது சட்ட மன்ற நிதியிலிருந்து ரூ.3 இலட்சம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திலிருந்து ரூ.1.75 இலட்சமும் ஒதுக்கி இரண்டு ஆழ்குழாய் கிணறு அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு தெரிவித்தார்.

இக்கிராம சபை கூட்டத்தில் கூட்டுறவு ஒன்றியத் தலைவர் மோகன், முன்னாள் ஒன்றியத் தலைவர் கோபிநாத், கூட்டுறவு சங்க தலைவர் முத்து, நிலவள வங்கி தலைவர் முருகன், முன்னாள் ராஜகிரி ஊராட்சி மன்ற தலைவர் ஷேக்தாவூது, வேளாண் துறை இணை இயக்குநர் கிருஷ்ணகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சொக்கலிங்கம், கால்நடை துறை இணை இயக்குநர் டாக்டர் ராஜசேகரன், மாவட்ட மலேரிய அலுவலர் டாக்டர் பேத்திபிள்ளை, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சரணவன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் முருகேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆர். நாராயணன், சூரியநாராயணன், செயல் அலுவலர் ஏ.மோகன்ராஜ், வட்டாட்சியர் ராணி மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago