முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆன்ட்டி-பயாடிக்குகள் வேலை செய்யாமல் தடுக்கும் புதியவகை மரபணு பாலில் உள்ளது:ஆய்வில் தகவல்

திங்கட்கிழமை, 1 மே 2017      உலகம்
Image Unavailable

ஜெனிவா  - பால் மற்றும் பால் பொருட்களில் உள்ள பாலாடைக் கட்டி போன்ற தீங்கற்ற பொருட்களில் கூட ஆன்ட்டி-பயாடிக்குகளை வேலை செய்ய விடாமல் தடுக்கும் புதுவகை மரபணுக்கூறு இருப்பதாக சுவிட்சர்லாந்தில் உள்ள பெர்ன் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பால்பொருட்களுக்காகவே பண்ணைகளில் வளர்க்கப்படும் பசுக்களில் இத்தகைய புதுவகை மரபணு இருப்பதை இவர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஸ்டெபைலோக்கோக்கஸ் ஆரியஸ் என்ற மெதிசிலினை ஏற்காது தடுக்கும் பாக்டீரியாக்களுக்கு எதிராக கொடுக்கப்படும் செஃபலோஸ்போரின்ஸ் கடைசி தலைமுறை மருந்துகள் உட்பட அனைத்து பீட்டா-லேக்டம் ஆன்ட்டி பயாடிக்குகளை வேலை செய்ய விடாமல் இவை தடுக்கிறது என்கின்றனர்.

இந்த ஆய்வாளர்கள். செபலோஸ்போரின்களில் செபலெக்சின், செபட்ராக்சில், செஃபடாக்சிம், செஃப்யூராக்சைடீம், செஃப்டிசைம், செஃப்ட்ரியாக்சோன் ஆகிய மருந்துகள் அடங்கும். தற்போது வழக்கமாக நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் ஆன்ட்டி-பயாடிக்குகளை நம் உடல் ஏற்காத தன்மைகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது, இந்த வகையில் இந்த ஆய்வுத்தகவல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பால் பண்ணைகளில் வளர்க்கப்படும் பசுக்களின் தோலில் மேக்ரோகோக்கஸ் கேசியோல்லைட்டிகஸ் என்ற தீங்கற்ற பாக்டீரியம் இயற்கையாகவே உள்ளது. ஆகவே இது பால்பொருட்களிலும் காணப்படுகிறது.

பசுக்களுக்கு ஏற்படும் ஒருவகை மாஸ்டைட்டிஸ் என்ற தொற்றுக்கிருமிக்கு பென்சிலின்கள், செஃபலோஸ்போரின்கள் மருந்தாகக் கொடுக்கப்படும் ஆனால் சமீபகாலங்களில் இது வேலை செய்யாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது.  இதனையடுத்து தற்போது இந்த புதிய மரபணு பாலில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, எனினும் இந்த ஆய்வு முதற்கட்ட நிலையில் உள்ளது என்றும் இந்த மரபணு எப்படி ஆன்ட்டி-பயாடிக்குகளை ஏற்காமல் தடுக்கிறது என்பதை இன்னும் விரிவாக ஆய்வுக்குட்படுத்துவது அவசியம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்