முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாரூர் மாவட்டம் கொட்டூர் ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபா கூட்டம் : திட்ட இயக்குநர் தியாகராஜன் பங்கேற்பு

திங்கட்கிழமை, 1 மே 2017      திருவாரூர்
Image Unavailable

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் கொட்டூர் ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபா கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஏ.தியாகராஜன் கலந்து கொண்டார்

தண்ணீர்

 இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தெரிவித்ததாவது....பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், ஊராட்சிகளில் குடிநீரை மோட்டார் மற்றும் முறையற்ற இணைப்புகள் மூலம் பெறாமல் அனைவரும் குடிநீர் பெறும் வகையில் உபயோகப்படுத்த வேண்டும். கிராமங்களில் தெரு குழாய்களில் தண்ணீர் வீணாவதை தடுக்க பயன்பாட்டில் இல்லாத போது குடிநீர் குழாயை மூடிவைக்க வேண்டும்.

மத்திய மாநில அரசுகளின் ஒருங்கிணைப்புடன் தமிழகத்தில் 1000 கிராம ஊராட்சிகளை வறுமையில்லாத ஊராட்சிகளாக மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த தினமான அக்டோபர் 2 ஆம் தேதி 2019க்குள் மாற்றிட அந்தியோதயா இயக்கம் முதற்கட்டமாக தொடங்கப்பட்டுள்ளது. இவ்வூராட்சிகளில் சமூக நலம் மற்றும் உட்கட்டமைப்புத்திட்டங்களை ஒருங்கிணைத்து அனைத்து பரிமாணங்களிலும் எய்தி வறுமையே இல்லாத கிராம ஊராட்சியாக மாற்றிட அரசோடு ஒத்துழைக்க வேண்டும்.கிராமங்களில் முழுமையான சுகாதார நிலையை அடைய திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்த்தல் வேண்டும்.மத்திய , மாநில அரசின் அறிவுறுத்தலின்படி தனிநபர் கழிப்பறைகளை கட்டி பயன்படுத்த வேண்டும்.திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் வீடுதோறும் குப்பைகளை சேகரி;க்க வரும் தூய்மை காவலர்களுக்கு மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாகப் பிரித்து கொடுத்து கிராமங்களில் சுகாதாரம் பேணி காக்க வேண்டும் என மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஏ.தியாகராஜன் தெரிவித்தார்.

பின்னர் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற கிராமமாக மாற்றிடவும், குழுந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மாற்றத்திறனாளிகள் மற்றும் முதியவர்களின் நலன் காத்து கிராமத்தை தூய்மை கிராமமாகவும் மாற்றிட முழு முயற்சி எடுப்பதாக திட்ட இயக்குநர் தலைமையில் கிராம மக்கள் உறுதிமொழி எடுத்தனர்இக்கூட்டத்தில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ராஜசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகம், திருநாவுக்கரசு, ஊராட்சி செயலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago