முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செங்கோட்டையில் விவேகானந்தா கேந்திரம் சார்பில் திருவிளக்கு பூஜை

திங்கட்கிழமை, 1 மே 2017      திருநெல்வேலி
Image Unavailable

 செங்கோட்டையில் விவேகானந்தா கேந்திரம் சார்பில் திருவிளக்கு பூஜை நடந்தது.

திருவிளக்கு பூஜை

 செங்கோட்டை அறம்வளர்த்த நாயகி உடனுறை குலசேகரநாதசுவாமி கோவிலில் வைத்து விவேகானந்தா கேந்திரம் கிராம முன்னேற்ற திட்டம் செங்கோட்டை கிளையின் சார்பில் உலக நன்மை, மற்றும் மழை வேண்டியும் மாபெரும் திருவிளக்கு பூஜை மற்றும் மாதர் மாநாடு நடந்தது.நிகழ்ச்சிக்கு செங்கோட்டை காந்தி சேவா மைய நிறுவனர் விவேகானந்தன் தலைமைதாங்கினார். கேந்திர சகோதரி தெய்வானை இறைவணக்கம் பாடினார். கேந்திர சகோதரர் கருப்பசாமி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அதனைதொடர்ந்து பள்ளி மாணவிகள் வரவேற்பு நடனம் ஆடினர். விவேகவாணி பத்திரிக்கை ஆசிரியரும் கேந்திர மூத்த ஆயுட்கால தொண்டர் கிருஷ்ணமூர்த்தி, கேந்திர கிராம முன்னேற்ற திட்ட செயலாளர் ஐயப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பின்னர் ஸ்ரீஜெயேந்திரா பள்ளி முதல்வர் ராணிராம்மோகன் திருவிளக்கை ஏற்றி வைத்து பேசினார்.

பலர் பங்கேற்பு

 விழாவில் செங்கோட்டை அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கேந்திர தொண்டர் கண்ணன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை விவேகானந்தா கேந்திர பொறுப்பாளர்கள் தொண்டர்கள் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சியில் கேந்திர தொண்டர்கள் ஐயப்பன், விஜயகுமார், சண்முகபாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர். திருவிளக்கு பூஜை ஏற்பாடுகளை கேந்திர சகோதரிகள் சந்திரா, சரஸ்வதி, மீனா ஆகியோர் செய்திருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago