முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிராமசபைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம், பங்கேற்பு

திங்கட்கிழமை, 1 மே 2017      தேனி
Image Unavailable

 

  தேனி.- தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முதலக்கம்பட்டி ஊராட்சியில் இன்று (01.05.2017) நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ந.வெங்கடாசலம், பங்கேற்றார்.

மாவட்ட கலெக்டர் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது, தேனி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று கிராமசபைக் கூட்டம் நடைபெறுகிறது. கிராமசபைக் கூட்டத்தின் நோக்கம் மக்களுக்கும், நிர்வாகத்திற்கும் இடையே உள்ள தொடர்பினை பூர்த்தி செய்வதற்கும், ஒரு கிராமத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை கண்டறிந்து பொதுமக்களின் முன்னிலையில் விவாதித்து மக்களின் முழு ஆதரவோடு ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும். கிராமங்கள் நகரங்களாக மாறிவருகின்ற இன்றைய காலகட்டத்தில் கிராமங்கள் அடிப்படை வளர்ச்சியில் தன்னிறைவு அடையும் போது நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பாகிறது. எனவே தான் கிராம வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை காரணமாக அமைகிறது.

தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களின் பயன்கள் பொதுமக்களை சென்றடைந்துள்ளதா என்பதனை கிராமசபை கூட்டங்களின் மூலமே அறிய முடியும். தமிழக அரசு கிராமப்புறங்களில் ஏழ்மை நிலையில் வாழ்கின்ற ஏழை, எளிய மக்கள், இளைஞர்கள், ஆதரவற்றவர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள், ஆகியோரிகளின் பொருளாதாரத்தை முன்னேற்றும் வகையில் மகளிர் திட்டம், புதுவாழ்வுத்திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தாட்கோ, மாவட்ட தொழில் மையத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள் தொழில் தொடங்கிட எண்ணற்ற பல்வேறு பயிற்சியளிக்கப்பட்டு அவர்களின் வாழ்வை மேன்மையடையச் செய்து வருவதோடு, தொழில் தொடங்கிட அரசு மானியத்துடன் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.

நமது நாட்டினைவிட பின்தங்கிய நாடுகளில் கூட கழிப்பறை பயன்படுத்தும் விகிதம் அதிகமாக உள்ள நிலையில் நமது நாட்டில் கழிப்பறை பயன்படுத்தும் விகிதம் குறைவாக உள்ளது. கிராமப்புற மக்கள் வெளிப்புறங்களில் மலம் கழிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். சுகாதாரமான தமிழகத்தினை உருவாக்கிட வேண்டும் என்பதற்காவும் தமிழக அரசு ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் ஒரு கிராமத்திற்கு தேவையான தனிநபர் கழிப்பிட வசதி, பொது ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக கழிப்பிட வசதிகள் செய்து வருகிறது. பொதுமக்கள் தங்களின் குடியிருப்புகளில் கழிப்பறைக்கு தேவையான இட வசதி இருந்தால் தனிநபர் கழிப்பறை உருவாக்கிட ரூ.12,000ஃ- அரசு மானியம் வழங்கி வருகிறது. பொதுமக்கள் திறந்த வெளிகளை பயன்படுத்தாமல் இத்திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இதுபோன்ற தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்கு பொதுமக்கள் தங்கள் ஒத்துழைபை நல்கிட வேண்டும் என மாவட்ட கலெக்டர் ந.வெங்கடாசலம், தெரிவித்தார்.

இக்கிராமசபைக்கூட்டத்தில் தனி நபர் கழிப்பறை கட்டி திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்த்திட வேண்டும் என்ற உறுதிமொழியினை மாவட்ட கலெக்டர் அவர்கள் தலைமையில் பொதுமக்கள் அனைவரும் எடுத்துக்கொண்டார்கள்.

கிராமசபைக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் வடிவேல் அவர்கள், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமதி.அபிதாஹனீப் அவர்கள், வட்டாட்சியர்கள் திருமதி.ராணி அவர்கள், திருமதி.நசீம் நிஷா அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாண்டி அவர்கள், பாரதமணி அவர்கள் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் ஏரளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago