முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கமுதி யூனியனில் நடைபெறும் குடிநீர் திட்ட பணிகள் கலெக்டர் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 2 மே 2017      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கூடுதல் குடிநீர்; ஆதாரங்கள்  ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும்; பல்வேறு குடிநீர் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் முனைவர் நடராஜன் நேரடியாகச் சென்று ஆய்வு செய்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் எதிர்பார்த்த அளவு வடகிழக்கு பருவமழை பெய்யாத காரணத்தினால்,  நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது.  இத்தகைய சூழ்நிலையில்  ஊரக பகுதிகளில் பொதுமக்களின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்திட ஏதுவாக கூடுதல் குடிநீர் ஆதாரங்கள் ஏற்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

குறிப்பாக, காவேரி குடிநீர் திட்டங்களிலிருந்து கிடைக்க வேண்டிய குடிநீர் ஆதார அளவு பாதிக்கும் கீழ் குறைந்துவிட்டபடியால் அதன்மூலம் பயனடைந்த கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என்பதை உணர்ந்து அக்கிராமங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கே.நெடுங்குளம், ஆதிதிராவிடர் காலணி வடக்குத் தெருவில் வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ்  ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளதையும், கே.நெடுங்குளம், தெற்குத்தெருவில் ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டுள்ளதையும், தலைவநாயக்கன்பட்டியில் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டுள்ளதையும், கமுதி ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து புளிச்சிக்குளம் கிராமத்தில் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டுள்ளதையும் கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்டத்தின் கீழ் கே.நெடுங்குளம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார மேம்பாட்டினை உறுதி செய்திடும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் தனி நபர் இல்லக் கழிப்பறைகள் கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.12 ஆயிரம் நிதியுதவி பெற்று பயனாளிகள் மூலம் கட்டி முடிக்கப்பட்டுள்ள தனி நபர் இல்லக் கழிப்பறையினையும் பார்வையிட்டார்.  கழிப்பறைகளை பயன்படுத்துவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, வீடுகளில் கழிப்பறைகள் இல்லாத நபர்கள் கழிப்பறை கட்டுவதற்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தினை பயன்படுத்தி கொள்ள ஊக்குவித்திட வேண்டும் என அலுவலர்களிடம் தெரிவித்தார். 

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.எஸ்.தனபதி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஆ.செல்லத்துரை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago