முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாவுரெட்டிபட்டி ஊராட்சியில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி: கலெக்டர் மு.ஆசியா மரியம் திறந்து வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 2 மே 2017      நாமக்கல்
Image Unavailable

 

மே-1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாவுரெட்டிபட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டது. இப்புகைப்படக்கண்காட்சியினை கலெக்டர் மு.ஆசியா மரியம் திறந்து வைத்து பார்வையிட்டார்.

புகைப்பட கண்காட்சி

இப்புகைப்படக்கண்காட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட புகைப்படங்கள், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி மற்றும் சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்ட புகைப்படங்கள், விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டம், விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம், விலையில்லா மாடுகள் வழங்கும் திட்டம், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள், சீருடைகள், பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் வழங்கும் திட்டம், தொட்டில் குழந்தை திட்டம், கர்ப்பிணி தாய்மார்களுக்கு மகப்பேறு நிதியுதவி வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், அம்மா குடிநீர், அம்மா உப்பு, பசுமை வீடுகள் கட்டும் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள் வழங்கும் திட்டம், முதியோர் உதவித்தொகை வழங்கும் திட்டம், விலையில்லா அரிசி வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டகளின் புகைப்படங்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.

இப்புகைப்பட கண்காட்சியினை கிராமசபைக்கூட்டத்திற்கு வருகை தந்த ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை எளிதில் அறிந்து கொள்ள முடிகின்றது என பெருமையுடன் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) க.சந்திரசேகரன், திருச்செங்கோடு வருவாய் வட்டாட்சியர் எஸ்.பூவராகவன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.அண்ணாதுரை, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (விளம்பரம்) அ.க.ரமேஷ் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வ.சிட்டிபாபு பி.ரமேஷ்;, ஒன்றியப்பொறியாளர் சி.மலர்விழி, உதவிப்பொறியாளர் செந்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை தனி நபர் கழிப்பிட திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.வி.அமுதஸ்ரீ, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி மாவட்ட துணை மேலாளர் ஆர்.கே.ஸ்ரீஇராமநாதன், மாணிக்கப்பாளையம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.ஆர்.கருணாகரன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) நேர்முக உதவியாளர் கே.ஜெகநாதன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு இப்புகைப்படக்கண்காட்சியினை பார்வையிட்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago