முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரு அணிகள் இணைவதை எல்லோரும் விரும்புகின்றனர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

செவ்வாய்க்கிழமை, 2 மே 2017      திண்டுக்கல்
Image Unavailable

நத்தம், - திண்டுக¢கல் மாவட்டம், நத்தத்தில் அதிமுக(அம்மா) ஒன்றிய, நகர செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதற்கு அவைதலைவர் பிறவிகவுண்டர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மருதராஜ், உதயகுமார் எம்.பி,  நகரசெயலாளர் சிவலிங்கம், மாவட்ட மாணவரணி இணைசெயலாளர் அசாருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் ஷாஜகான் வரவேற்றார். கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக¢கல் சீனிவாசன் பேசியதாவது:

        நெய்வேலியில் நிலக¢கரி விற்கமுடியாது. கொல்லன் தெருவில் ஊசி விற்கமுடியாது. அதுபோல் உங்களிடம் விளக¢கம் சொல்ல தேவையில்லை. எல்லோரும் ஒற்றுமையாகத்தான் இருக¢கிறோம். அம்மா அவர்கள் காலத்தில் ஒதுக¢கி வைக¢கப்பட்டவர்கள் இப்போது பிளவு படுத்த நினைக¢கிறார்கள். 1980ல் திண்டுக¢கல் நகரசெயலாளராக இருந்தேன், அதுமுதல் கடந்த 45 ஆண்டு காலமாக கட்சிபணியில் இருந்து வருகிறேன். நன்றி மறக¢காமல் இறைவன் எல்லாவற்றையும் கொடுப்பான். இறைவனால் கொடுப்பதை எவரும் தடுக¢கமுடியாது. இறைவனால் மறுக¢கப்படுவதை எவரும் பெறமுடியாது. மறைந்த முதல் அமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அவர்களால் காப்பாற்ற பட்ட இரட்டை இலை சின்னத்தை முடக¢க காரணமாக இருந்தவர்களுக¢கு கடவுள் கூலி கொடுப்பான்.

       தமிழக அரசுக¢கும், மத்தியஅரசுக¢கும் எந்த விதமான மோதலும் கிடையாது. தொடர்போராட்டமாக டில்லியில் நடந்து வந்த விவசாயிகள் போராட்டத்தை முடிவுக¢கு கொண்டு வந்தவர் நமது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள். தமிழகத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதை சமாளிக¢க அரசு சுமார் ரூ.100 கோடி வரை ஒதுக¢கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது. இரண்டு அணிகளும் இணையவேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பமாகும். நத்தம் தொகுதியை பொறுத்தவரை  எந்தவிதமான குறைபாடுகள் இருந்தாலும் எப்போதும் என்னை தொடர்பு கொள்ளலாம். மேலும் தமிழகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு திமுக தான் துணை போகிறது.  இவ்வாறு அமைச்சர் பேசினார்.

       இந்த கூட்டத்தின் போது மாவட்ட பேரவை துணைசெயலாளர் ஜெயபாலன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் சின்னாகவுண்டர், சத்தியமூர்த்தி, நகரபொருளாளர் சீனிவாசன், ஒன்றிய பாசறை செயலாளர் தாமோதரன்,  மற்றும் ராஜகோபால், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் முகமது அலி, செல்வமணி உள்ளிட்ட ஒன்றிய,நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நகர அவைதலைவர் கருப்பையா நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago