முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முத்தாபுதுப்பேட்டையில் சரக்கு வாகனங்களை திருடிய 4 பேர் கைது

செவ்வாய்க்கிழமை, 2 மே 2017      சென்னை
சென்னை, முத்தாபுதுப்பேட்டை, பாலவேடு, நாசிக் நகரில் வசித்து வரும் குப்பன் (35), /பெ. ஜெயராமன் என்பவர் தனக்கு சொந்தமான சரக்கு ஏற்றும் நான்கு சக்கர வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார். குப்பன் கடந்த 12.4.2017 அன்று இரவு வேலை முடித்து மேற்படி வாகனத்தை அவரது வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு, தூங்க சென்றார்
 2 குற்ற சம்பவங்கள்
மறுநாள் (13.4.2017) குப்பன் வெளியே வந்து பார்த்தபோது, அவரது மேற்படி வாகனத்தை யாரோ திருடிச் சென்றுவிட்டது தெரியவந்தது. அதன்பேரில், குப்பன் ட்டி-8 முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதே போல மாரிச்சாமி (37), /பெ.ராமசாமி, எண்.2/445, சாஸ்திரி நகர் பிரதான சாலை, பாலவேடு, முத்தாபுதுப்பேட்டை என்பவர் அவருக்கு சொந்தமான சரக்கு ஏற்றும் நான்கு சக்கர வாகனத்தில் கடந்த 30.4.2017 அன்று மதியம் சுமார் 02.30 மணியளவில், முத்தாபுதுப்பேட்டை பஜார் அருகே சென்றுக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் 3 பேர் மாரிச்சாமியின் வண்டியை வழிமறித்து, அவரை தாக்கிவிட்டு, அவரது வாகனத்தை அபகரித்துக்கொண்டு சென்றுவிட்டனர். இச்சம்பவம் குறித்து, மாரிச்சாமி, ட்டி-8 முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.மேற்படி 2 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய, முத்தாபுதுப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், மேற்படி தனிப்படையினர் முத்தாபுதுப்பேட்டை, பாலவேடு 400 அடி சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சுமார் 11 மணியளவில், சரக்கு ஏற்றும் நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி, விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் பதிலளித்தனர்.
 
மேலும், அவர்களை விசாரணை செய்தபோது, மேற்படி வாகனம் மாரிச்சாமியின் சரக்கு ஏற்றும் வாகனம் என்பதும், வாகனத்தின் பதிவு எண்ணை மாற்றி விற்க சென்றபோது பிடிபட்டதும் தெரியவந்தது. அதன்பேரில், மேற்படி வாகனத்தை திருடிய குற்றவாளிகள், கமல்ராஜ் (32), ஐயப்பன்தாங்கல், ரபீக் (28), வெங்கல், திருவள்ளூர் மாவட்டம், பாலமுருகன் (30), கரிசல் குளம், மதுரை மாவட்டம் மற்றும் இவர்கள் திருடும் வாகனங்களை விற்றுத்தந்த குற்றவாளி முத்துமணி (45), முத்துப்பட்டி, மதுரை மாவட்டம் ஆகிய 4 குற்றவாளிகளை கைது செய்தனர். மேலும், விசாரணையில், இவர்கள் 3 பேரும் சேர்ந்து, மேற்படி குப்பனின் சரக்கு ஏற்றும் வாகனம் மற்றும் வேறு இடங்களில் 2 சரக்கு ஏற்றும் வாகனங்களை திருடியதும், இவ்வாகனங்களை மற்றொரு குற்றவாளி முத்துமணியிடம் கொடுத்து விற்றதும் தெரியவந்தது. அதன்பேரில், குற்றவாளிகளிடமிருந்து 4 சரக்கு ஏற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்